
நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அறவழிப் போராட்டம் மட்டுமின்றி ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திர தின நாளை வாழ்க்கையில் யாராலும் நிச்சயம் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது. அதற்கேற்றால் போல் தான் இந்த நாளில் அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செய்கின்றனர். கொடி ஏற்றி கொண்டாடப்படும் இந்த நாளில், அந்த இடங்களை அழகுபடுத்தவும் மறப்பதில்லை. வீட்டு வாசலில் மற்றும் கொடி ஏற்றப்படும் இடங்களில் அழகுக்காகப் போடப்படும் சிறந்த கோலங்களைப் பார்க்கலாம்.
சுதந்திர தினத்தன்று வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்டிப்பாக இந்த கோலத்தை பார்த்து ரசிக்காமல் செல்ல மாட்டார்கள். இந்த கோலத்தை பார்க்கும் கண்கள், அதை வீட்டு கண்களை எடுக்கவே மனம் வராது, அவ்வளவு அழகாக இருக்கும் இந்த கோலம். நமது தேசிய சின்னங்களான தாமரை மற்றும் மயில்களை கொண்டும், அழகிய மூவர்ண நிறங்களைப் பயன்படுத்தியும் உருவாக்கப்பட்டது இந்த கோலம். கோலத்தை முடிக்கும் தறுவாயில் பச்சை நிறத்தில் மயில் தோகைக்கு வண்ண தீட்டி இருப்பது கூடுதல் அழகை சேர்த்திருக்கும்.

எளிமையாக வகையில் அசோக சக்கரத்தைக் கோலமாக வரைந்து, அதற்கு நில நிற வண்ணங்களை இட்டு அழகுபடுத்தவும். இந்த கோலத்தை மேலும் அழகுபடுத்த, வட்டத்தை சுற்று பூக்களை வரையவும். இந்த பூக்களுக்குக் காவி நிறம், மற்றும் பச்சை நிறத்தை இட்டு அழகுபடுத்தலாம். இந்த ரங்கோலி கோலத்தை சுற்றி சிறிய ரங்கோலி பூக்கள் வரைந்து அழகுபடுத்தலாம்.

மேலும் படிக்க: உகாதி திருநாளில் வீட்டு வாசல் ஜொலிப்பதற்கு போடக்கூடிய எளிதான 5*3 கோலம், 3*2 கோலம்
சிறிய வட்டம் வரைந்த, அதற்கு மூவர்ண நிறத்தில் அழகுபடுத்தவும். நடுவில் நில நிறத்தில் அசோக சக்கரத்தை வரையவும். வட்டத்தை சுற்று சங்கு போன்ற வடிவத்தை வரைந்து, அதிலும் மூவர்ண நிறங்களால் அழகுபடுத்தவும். பின் அந்த மூவர்ண நிறங்களைக் கொண்டு பூக்கள் போன்ற வடிவத்தை வரைந்து கோலத்தை நிறைவு செய்யவும்.

வட்ட வடிவத்தை வரைந்து, கோலத்திற்கு நிறங்களை இட்டு முழுமைப்படுத்த வேண்டும். வட்டத்திற்கு இரண்டு புரமும் பூக்கள் வடிவம், இலைகள் வடிவம் கொடுத்து நிறங்களால் அழகுப்படுத்தவும். வட்டத்திற்கு மேல் பகுதியில் மக்களின் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் விதத்தை குறிக்கும் விதமாக வரைந்து முழுமைப்படுத்த வேண்டும். உணர்வுப்பூர்வமாக இருக்கும் வகையில் இந்த கோலம் அமைந்திருக்கும்.

மேலும் படிக்க: மகா சிவராத்திரிக்கு லிங்க வடிவ கோலத்தை வீட்டில் போட்டு சிவனை வழிபடவும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]