புதர் போல புதினா இலைகள் துளிர்த்து வளர்வதற்கு இதை மட்டும் பண்ணுங்க

மாடித் தோட்டத்தில் புதினா செடி வளர்ப்பது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். மாடியிலேயே புதினா வளர்க்க தெரிந்து கொண்டால் கடைகளில் ஒரு கட்டு புதினா பத்து ரூபாய், 15 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
image

எந்த உணவிலும் சுவையை அதிகரிப்பதற்கு கொஞ்சமாக புதினா, கொத்தமல்லி சேர்ப்பது பயனளிக்கும். பல் துலக்கிய பிறகு 3-4 புதினா இலைகளை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் என ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. புதினா இருந்தால் அவசரத்திற்கு புதினா சட்னி அரைத்து இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிடலாம், பருப்பு போட்டு தாளித்து புதினா சாதம் செய்யலாம். பிரியாணி போன்றவற்றில் சேர்க்கலாம். 100 கிராம் புதினாவில் 8 கிராம் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து 7 கிராம், புரதம் 3.3 கிராம், தினசரி தேவையில் வைட்டமின் சி 22 விழுக்காடு, இரும்புச்சத்து 66 விழுக்காடு, வைட்டமின் பி6 10 விழுக்காடு இருக்கிறது. மாடித் தோட்டத்தில் புதினா வளர்க்க தெரிந்து கொண்டால் கடைகளில் சென்று புதினா கட்டு வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதை வளர்ப்பது மிக மிக எளிது.

mint growing

மாடி தோட்டத்தில் புதினா

புதினா செடி வளர்ப்பு

  • சமையலில் புதினா பயன்படுத்திய பிறகு சிறு சிறு இலைகளுடன் இருக்கும் புதினா தண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
  • இதை நேரடியாக மண்ணில் ஊனி வைத்தால் 10க்கு 4 தண்டுகள் வளராமல் போய்விடும்.
  • இந்த தண்டுகளை பாதியளவு தண்ணீர் உள்ள டம்ளரில் போட்டு வைக்கவும். 7-8 நாட்களில் புதினா தண்டுகளில் வேர் விட்டு இருக்கும்.
  • இரண்டு நாளைக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றிவிடுங்கள். புதினா வளர்க்க அதிகமான சூரிய வெளிச்சம் தேவையில்லை.

புதினா வளர்ப்பு மண் கலவை

  • செம்மண்ணில் புதினா வளர்க்கலாம் என தோட்டக்கலை நிபுணர்களை தெரிவிக்கின்றனர்.
  • 60 விழுக்காடு உதிரி செம்மண், 20 விழுக்காடு, 20 விழுக்காடு மண் புழு உரம் இவை அனைத்தையும் சேர்த்து 30*30 அளவுள்ள மண் தொட்டியில் நிரப்பவும்.
  • வேர் விட்ட புதினா தண்டுகளை எடுத்து ஒரு விரல் ஊனி அதில் தண்டுகளை கொஞ்சம் இடைவெளிவிட்டு நடவும்.

மாடி தோட்டத்தில் புதினா செடி

  • பூச்சி தாக்குதல் இன்றி வளரக்கூடிய செடிகளில் ஒன்று புதினா. எனவே நீங்கள் உரம் மட்டும் தேவையான நாட்களில் பயன்படுத்தினால் போதும்.
  • ஒரு மாதத்தில் புதினா செடி நன்கு புதர் போல் அடர்ந்து வளர்ந்திருக்கும்.
  • காலை, மாலை நேரங்களில் தண்ணீர் தெளித்தால் போதுமானது. அதிகளவு தண்ணீர் ஊற்றினால் புதினா வேர் அழுகிவிடும்.
  • முதல் முறை அறுவடை செய்த பிறகு மண் புழு உரம் கொடுங்கள். அடுத்த அறுவடை 15 நாட்களில் கிடைக்கும்.
  • காய்கறி கழிவு, மீன் அமிலம் ஆகியவற்றை உரமாக பயன்படுத்தலாம். இலை பழுத்து மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அந்த கிளையை வெட்டிவிடவும்.
  • இதை கவனிக்க தவறினால் நுனி பகுதி கருகிவிடவும் வாய்ப்புண்டு.
  • அரிசி கழுவிய தண்ணீரையும் செடிக்கு ஊற்றலாம். ரொம்பவும் பராமரிப்பு இல்லாத புதினா செடியை மாடித் தோட்டத்தில் வளர்த்து பயன்பெறுங்கள்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP