மாடியில் பெரிய வெங்காயம் வளர்த்து கிலோ கணக்கில் விளைச்சல் காண்பதற்கான வழி

பெரிய வெங்காயத்தை மாடித் தோட்டத்தில் வளர்ப்பது எப்படி ? பெரிய வெங்காயத்திற்கு விதை உண்டா ? அதிகப்படியான விளைச்சல் பெற என்ன செய்வது ? நோய் தாக்குதலை தவிர்க்க இயற்கை உரம் பயன்பாடு உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
image

நான்கு பேர் உள்ள குடும்பத்தில் வாரத்திற்கு 2 கிலோ பெரிய வெங்காயம் சமையலுக்கு தேவைப்படும். தக்காளி, வெங்காயம் இன்றி சமையல் செய்வது கடினம். மழைக்காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் ஏறிவிடும். கிலோ வெங்காயம் 100 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்படும். இதர மாதங்களில் கிலோ 20 ரூபாய், 5 கிலோ 100 ரூபாய் என கூவி கூவி விற்பார்கள். அம்மா பசிக்குது அவசரமாக எதாவது செய்து கொடுங்கள் என கேட்டால் வெங்காயம், தக்காளி நறுக்கி போட்டு வதக்கி சட்டுனு சமைக்கிறேன் என்பார்கள். வெங்காயத்தின் விலை ஏறும் போது சிரமப்படுவர்கள் தாய்மார்கள் தான். விற்கும் விலைவாசிக்கு வெங்காயம் இன்றி எப்படி சமைப்பது என யோசிப்பார்கள். இனி அந்த கவலை எல்லாம் தேவையில்லை. மாடித் தோட்டத்தில் பெரிய வெங்காயம் வளர்த்து நல்ல அறுவடை காணலாம். பெரிய வெங்காயத்திற்கு விதை தேர்வு, எத்தனை நாட்களில் வளரும் ? நோய் தாக்குதல் இன்றி பெரிய வெங்காயம் வளர்ப்பு உள்ளிட்ட விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாடித் தோட்டத்தில் பெரிய வெங்காயம் வளர்ப்பு

பெரிய வெங்காயத்திற்கு மண் கலவை

  • பெரிய வெங்காயம் விதை கொண்டு வளர்க்கப்படுகிறது. நாட்டு விதை கடைகள், தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் பெரிய வெங்காய விதைகள் கிடைக்கும். விதைகளின் விலை மிகவும் குறைவே.
  • நன்றாக வளர்ந்த வெங்காய செடியின் பூவில் விதைகள் கிடைக்கும். அதையும் நீங்கள் விதைக்க பயன்படுத்தலாம். நாற்று எடுத்து பெரிய வெங்காயத்தை வளர்க்க வேண்டும்.
  • மிளகு சைஸில் பார்ப்பதற்கு பெரிய வெங்காய விதைகள் கருப்பு நிறத்தில் இருக்கும்.
  • முதலில் நாற்று தயார் செய்ய 1:1 அடி மண் தொட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் 60 விழுக்காடு செம்மண், 40 விழுக்காடு கோகோபீட் கலந்து வெங்காய விதைகளை சுற்றி தூவி தண்ணீர் ஊற்றுங்கள்.
  • ஒரு வாரத்தில் சிறிய செடி முளைக்கும். இதை வேர் உடன் வெளியே எடுத்து நாற்று போல் நட வேண்டும்.
  • செவ்வக வடிவ மண் தொட்டியில் 60 விழுக்காடு செம்மண், 20 விழுக்காடு கோகோபீட், 20 விழுக்காடு மக்கிய மாட்டு எரு போட்டு அதில் வேர் உள்ளே இருப்பது போல் பெரிய வெங்காயத்தை நாற்று நடவும்.
  • 15 செ.மீ இடைவெளியில் நாற்று நட்டு பெரிய வெங்காயம் வளர்க்க ஆரம்பிக்கவும்.

பெரிய வெங்காயம் வளர்ப்பு

  • சரிந்த வேர்கள் 2 நாட்களில் உயிர்த்தெழுந்து வளரும். பெரிய வெங்காயத்தில் செம்மண்ணில் இருந்து போதுமான ஊட்டச்சத்துகள் கிடைப்பது அவசியம்.
  • இதற்காக ஒரு கிலோ செம்மண் எடுத்து அதை ஒரு பக்கெட் தண்ணீரில் கரைக்கவும். மண் அடியில் தங்கிவிடும். இப்போது அந்த தண்ணீரை வெங்காய செடியின் மீது தெளிக்கவும். 10 நாட்களுக்கு ஒரு முறை இப்படி செய்தால் செடிக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும்.
  • பெரிய வெங்காயம் நன்கு வளர சூரிய வெளிச்சம் தேவை. மண்ணில் ஈரப்பதம் போதுமானது. அதிகளவு தண்ணீர் ஊற்ற தேவையில்லை.

மேலும் படிங்கமாடியில் தக்காளி செடி நிறைய காய்கள் பிடித்து வளர்ப்பதற்கான முறை; பங்கு போட்டு சாப்பிடலாம்

பெரிய வெங்காயம் நோய் தாக்குதல் தவிர்ப்பு

  • 15 நாட்களுக்கு ஒரு முறை பெரிய வெங்காய செடி மீது பஞ்சகவ்யம் தெளிக்கவும். மீன் அமிலமும் பயன்படுத்தலாம்.
  • 5-6 மாதங்களில் வெங்காய அறுவடை செய்யலாம். மொட்டு வைத்த பிறகு வெங்காய சாகுபடி செய்துவிடுங்கள்.
  • மழைக்காலத்தில் வெங்காயம் வளர்க்காதீர்கள். வேர் அழுகல், நுனி கருகல், கோழிக்கால் நோய் தாக்குதல்களை தவிர்க்க இயற்கையான உரங்களை பயன்படுத்தவும்.
  • வெங்காயத்தை மண்ணில் இருந்து எடுத்த பிறகு ஒரு வாரத்திற்கு செடியை காய விடவும். அதன் பிறகு வெட்டி எடுத்து வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தவும்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP