மாடியில் தக்காளி செடி நிறைய காய்கள் பிடித்து வளர்ப்பதற்கான முறை; பங்கு போட்டு சாப்பிடலாம்

மாடித் தோட்டத்தில் தக்காளி செடி வளர்ப்பது எப்படி, தக்காளி செடிக்கு கொடுக்க வேண்டிய உரம், நோய் தாக்குதலை தவிர்க்க எந்த ரக தக்காளி பயன்படுத்த வேண்டும், அதிகமான தக்காளி விளைச்சல் பெற என்ன செய்வது உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
image

தக்காளி, வெங்காயம் இன்றி எந்த உணவையும் சமைக்க முடியாதென அம்மா அடிக்கடி சொல்லி கேட்டிருப்போம். தக்காளி விலை கணிக்க முடியாதது. திடீரென கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு கிடைக்கும், ஒரு சில மாதங்களில் கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கு விற்பனையாகும். அப்போதெல்லாம் நம்முடைய அம்மா தக்காளி சட்னி செய்வதை நிறுத்திவிடுவார்கள். இரண்டு தக்காளி பயன்படுத்தும் இடத்தில் ஒரு தக்காளி மட்டுமே பயன்படுத்தப்படும். சமையலில் தக்காளியின் தேவையை உணர்ந்தவர்கள் விலைவாசி பற்றி கவலைப்படாமல் பயன்படுத்த மாடித் தோட்டத்திலேயே அதை வளர்க்கலாம்.

how to grow tomatoes

மாடித் தோட்டத்தில் தக்காளி செடி வளர்ப்பு

  • நல்ல தரமான நாட்டு தக்காளி விதைகளை வாங்கி பயன்படுத்தவும். அப்போது தான் பூச்சி தாக்குதல், இலை சுருட்டல் பிரச்னையை தவிர்க்க முடியும்.
  • தக்காளி செடி வளர்ப்பதற்கு பிளாஸ்டிக் கேன் போதுமானது. கேனின் மேல் பகுதியை வெட்டி சிலிண்டர் போல் மாற்றி வெளிப்பறத்தில் பெயிண்ட் அடிக்கவும்.
  • தக்காளி செடி நன்கு வளர்வதற்கு பொட்டாசியம் சத்து தேவை. எனவே மண் கலவை அடுக்கு மிக முக்கியம்.
  • கீழ் அடுக்கில் நான்கு அங்குலத்திற்கு கோகோபீட் நிரப்பவும். அடுத்ததாக 1:1:1 விகிதத்தில் செம்மண், கோகோபீட், மண் புழு உரத்தை ஐந்து அங்குலத்திற்கு நிரப்பவும்.
  • பொட்டாசியம் தேவையை பூர்த்தி செய்ய நன்கு காய வைத்த வாழைபழ தோல், முட்டைக்கூடு, வெங்காய தோல், பூண்டு தோல் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து அதில் கால் பங்கு அளவை செடி வளர்க்கும் கேனில் போடுங்கள்.
  • இதன் மேல் கொஞ்சமாக நிலக்கரி சேர்க்கவும். இது செடிக்கு ஈரப்பதத்தை உறுதி செய்யும். பொட்டாசியம் சத்தையும் கொடுக்கும். நிலக்கரி நுண்ணுயிர் பெருக்கத்திற்கும் உதவும்.
  • அடுத்ததாக செம்மண், ஆட்டு எரு கலவை, மண் புழு உரம் நிரப்பி கொஞ்சமாக வெற்றிலை சுண்ணாம்பு வைத்து மூடிவிடுங்கள்.
  • இதில் ஆங்காங்கே ஒரு விரல் விட்டு தக்காளி விதைகளை போட்டு மூடிவிட்டு தண்ணீர் ஊற்றவும். தக்காளிக்கு அதிகளவிலான தண்ணீர் ஊற்றக் கூடாது.

மேலும் படிங்கமாடியில் ரோஜா செடி பூத்து குலுங்க வளர்ப்பு முறை; உரம் பயன்பாடு, பூச்சி விரட்டி தகவல்

தக்காளி செடி மகரந்த சேர்க்கை

  • இரண்டு மூன்று நாட்களில் முளைப்பு தெரிந்து 10-15 நாட்களில் ஒரு விரல் அளவிற்கு தக்காளி செடி வளரும். இப்போது இவற்றை வெளியே எடுத்து நன்கு வேர் பிடித்தவற்றை இதே மண் கலவையில் வேறு வேறு பிளாஸ்டிக் கேன்களுக்கு மாலை நேரத்தில் மாற்றவும்.
  • இப்படி செய்யும் போது மறுநாள் காலையிலேயே செடி எழுந்துவிடும். வேர் மீது சூரிய வெளிச்சம் படக்கூடாது.
  • செடியின் உயரம் அதிகரிக்கும் போது அருகில் மூங்கில் குச்சியை நட்டு பூ கட்டும் நார் வைத்து தண்டு பகுதியை கட்டவும்.
  • மேலே கிளைகள் நீண்டு வளரும் போது வேர் பகுதிக்கு கொஞ்சம் மேலே உள்ள கிளைகளை உடைத்துவிடவும். அங்கு தக்காளி வளர வாய்ப்பு குறைவு. அதே நேரம் செடி சாய்ந்துவிடும்.
  • 20 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யம் தெளிக்கலாம். வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீர் ஊற்றவும். மழைக்காலத்தில் மண்ணின் ஈரப்பத்ததை பார்த்துவிட்டு தண்ணீர் ஊற்றினால் போதுமானது.
  • 60 நாட்களில் பூ விட ஆரம்பிக்கும். அதன் பிறகு மகரந்த சேர்க்கை நடந்து நீங்கள் எதிர்பார்த்தபடி சிவப்பு நிறத்தில் தக்காளிகள் கிடைத்து கொண்டே இருக்கும்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP