பெண்களுக்கும் மல்லிகை பூவிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தலையில் வைத்து அழகு பார்ப்பார்கள் அல்லது தினமும் சாமி படத்திற்கு போடுவார்கள். சுப நிகழ்வுகளுக்கு செல்லும் போது மல்லி பூவை கட்டாயமாக வைத்திருப்பார்கள். நகரத்து பெண்கள் பூ வைப்பதை தவிர்த்தாலும் டவுன், கிராமப் பகுதிகளில் மல்லிகை பூவிற்கு மவுசு குறைந்ததில்லை. கிராமங்களில் மல்லிப் பூ கட்டிக் கொடுத்து 100-200 ரூபாய் ஊதியமாக பெறுகின்றனர். மல்லிப் பூ ஒரு முழம் வெளியே வாங்கினால் விலை அதிகமாக தான் இருக்கும். அதை வீட்டிலேயே வளர்க்கும் போது அன்றாடம் சவாமி படத்திற்கு மாலையாக கோர்த்து போடலாம். இந்த பதிவில் மல்லிகை செடி எப்படி வளர்ப்பது என பார்ப்போம்.
தரமான மல்லிகை பூ செடியை நர்சரியில் இருந்து வாங்கி கொள்ளவும். நிறைய அரும்புகள் பிடித்து மல்லிகை பூக்கள் பூக்க நல்ல செடி அவசியம். 15*15 மண் தொட்டி வாங்கி அதில் செம்மண் 40 விழுக்காடு, கோகோபீட் 20 விழுக்காடு, மண் புழு உரம் 20 விழுக்காடு, தொழு உரம் 20 விழுக்காடு போட்டு நிரப்பவும். செம்மண் உதிரியாக இருந்தால் மட்டுமே எந்த செடியாக இருந்தாலும் வளரும். செடி வைத்த மூன்று மாதத்தில் நன்கு வேர் பிடித்து வளர ஆரம்பிக்கும்.
மல்லிகை பூ செடிக்கு அரிசி கழுவும் தண்ணீர் ஊற்றுங்கள். போதுமான வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் மல்லிகை பூ தொட்டியை வைக்கவும். வாரத்திற்கு இரண்டு முறை பூண்டு-வெங்காய தோல் போடும் போது அபரிவிதமான வளர்ச்சியை செடி காணும். நிறைய துளிர் விட்டும் வளரும்.
மேலும் படிங்க மாடியில் ரோஜா செடி பூத்து குலுங்க வளர்ப்பு முறை; உரம் பயன்பாடு, பூச்சி விரட்டி தகவல்
சில சமயங்களில் மல்லிகை செடி வளர்ந்தாலும் அரும்புகள் வைத்து பூக்கள் வளர்வதில் சிக்கல் இருக்கும். இதற்கு நாம் அமிலத்தன்மை நிறைந்த கரைசலை பயன்படுத்த வேண்டும். நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் படிகாரத்தை தூள் செய்து கரைத்து மண்ணில் ஊற்றலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை புளித்த மோரில் 100 மில்லியை ஒரு லிட்டரில் கலந்து செடியின் மீது தெளிக்கவும். நீங்கள் தேமோர் கரைசலும் பயன்படுத்தலாம். ஈரப்பதம் குறைவாக இருந்தாலும் வறட்சியை தாக்குப்பிடித்து வளரக்கூடியது மல்லிகை பூ செடி.
செடி ஓரளவு வளர்ந்த பிறகு கீழ் இலைகளை கிள்ளி விடவும். மேல் நோக்கி வளரும் போது அதிக பூக்கள் கிடைக்கும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]