இவர்களே Herzindagi.com இன் ஆர்வமுள்ள, எச்சரிக்கை மற்றும் நவீன பத்திரிகையாளர்கள். இந்த ஆசிரியர்கள் வாசகர்களின் தேவைகளை நன்கு அறிந்தவர்கள், அதனால்தான் அவர்கள் ஹெர்ஜிந்தகி வாசகர்களை அவர்களுக்கு சிறப்பு ஆர்வமுள்ள செய்திகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஃபேஷன், அழகு, சமையல் வகைகள், பயணம் மற்றும் புதிய போக்குகள் முதல் உலகெங்கிலும் உள்ள பெண்களை ஊக்குவிக்கும் கதைகள் வரை, பெண்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துவதில் Herzindagi எழுத்தாளர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
Sub Editor
அனைவருக்கும் வணக்கம், எனது பெயர் அபிநயா, நான் ஒரு பத்திரிகையாளர். டிஜிட்டல் ஜர்னலிஸ்டாக எனது பணியை தொடங்கி இன்று வரை எனது பணிகளை 5 வருட காலமாக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து கொண்டு இருக்கிறேன். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வளைத்தளங்களை நன்கு கையாளும் திறன் எனக்கு இருக்கிறது.
View ProfileJunior Sub Editor
நான் அழகர் ராஜ், கடந்த ஒரு வருட காலமாக டிஜிட்டல் ஊடகத்துறையில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். இந்த துறையில் சேர்ந்த முதல் நாளில் இருந்து தினமும் பல புதிய அனுபவங்களையும், தகவலையும் கற்று கொள்கிறேன். நான் அறிந்த புதிய தகவல்களை டிஜிட்டல் ஊடகம் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஆரோக்கியம், பயணம், பொழுதுபோக்கு, உணவு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்த சுவாரசிய மற்றும் ஆச்சரியமூட்டம் தகவலை தெரிந்து கொள்ள என்னுடன் இணைந்திருங்கள்.
View ProfileContent Manager - Tamil
பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன் ஒரு டிஜிட்டல் மீடியா பத்திரிகையாளர் ஆவார். அவருக்கு ஆரோக்கியம், சமையல் குறிப்பு, அழகு குறிப்பு, ஆன்மிகம், ரிலேஷன்ஷிப், பிள்ளை வளர்ப்பு, கர்ப்பகால டிப்ஸ், டிராவலிங், பொழுதுபோக்கு என பல துறைகள் குறித்து எழுதுவது மிகவும் பிடிக்கும். அவருடைய மற்ற நேரங்களில், நாவல்கள், கவிதைகள், சிறு கதைகள், பாடல்கள் போன்றவற்றை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில், கிராபிக் டிசைனர் ஆக பணிபுரிந்தார். ஆனால், எழுத்து மீது இருந்த ஆர்வம் காரணமாக எழுத்தாளர் ஆனார்.
View ProfileSenior Sub-Editor
நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.
View ProfileSenior Sub Editor
வணக்கம், நான் கனிமொழி. தொலைக்காட்சி ஊடகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி அனுபவம் இருந்தாலும், ஆன்லைன் ஊடகத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. எஸ்க்க்ளுசிவ் சினிமா நேர்காணல்கள், லைஃப்ஸ்டைல், ஆரோக்கியம் பற்றிய கட்டுரைகள் எழுதுவது பிடிக்கும். சினிமா, லைப்ஃஸ்டைல் மட்டுமின்றி விளையாட்டு, உணவு, சுற்றுலா சம்பந்தமான கட்டுரைகளை எழுதுவது எனக்கு பிடித்தமானது.
View ProfileJunior Content Writer
நான் வே. ஜான்சி மாலா ஸ்ரீ. சிறு வயதில் இருந்தே எழுத்துக்களின் வாயிலாக பலருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம். இது தான் ஊடக துறையில் என்னைக் கால்பதிக்க செய்தது. புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், சன் நியூஸ் என காட்சி ஊடகத்தில் 7 ஆண்டுகள் செய்தியாளராகப் பணியாற்றினேன். தற்போது டிஜிட்டல் மீடியாவில் எனது பயணத்தைத் தொடங்கியுள்ளேன். உள்ளடக்க எழுத்தாளராக (Content Writer) பெண்களின் முன்னேற்றம், வாழ்க்கை சூழல் போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
View ProfileDigital Media Journalist
I am Prabhanjani, digital media journalist. I love to explore and write contents about health tips, womanhood, pregnancy, beauty, entertainment and many more. I started working as an television anchor. I love to draw, travel and watch movies.
View ProfileEditor
Digital Journalist who specialises in content production and distribution strategies. he covers core politics and civic affairs nationwide. Been Instrumental in various organisations like BBC, Times of India, Sharechat with his novelty in localizing approaches.A solo traveller who explores the infinite interesting aspects of India and is fascinated by reading and writing. Started practising journalism from print in 2017. Later Served to learn in television media and was stabilised himself with nuances in digital media.Ever learning student and always a pen towards people. Nowadays I am a digital pen, writing using digital tools with ever-constant ethics and humanity.
View ProfileSenior Sub-editor
வணக்கம் , நான் ராஜ பாலாஜி ( ஆர்.பி.ஜி ) . அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் நான்கரை ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ளது. டிஜிட்டல் உலகில் அடுத்தக்கட்ட பயணத்தை தொடங்கியுள்ளேன். விளையாட்டு,திரை உலகம்,பொழுதுபோக்கு,உணவு பற்றிய கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. வாழும் இவ்வுலகை சொர்க்கமாக கருதும் நான், இங்குள்ள ஒவ்வொரு நொடியையும் ஆக்கப்பூர்வமான மற்றும் மகிழ்ச்சிகரமான விஷயங்களுக்காக செலவிட விரும்புகிறேன்.
View ProfileChief Sub-Editor
நான் முத்துகிருஷ்ணன், செய்தித் துறையில் அனைத்து பிரிவிலும் கற்றுத் தேர்ந்தவன்.செய்தி தொகுப்புகள், கட்டுரைகள் எழுத மிகவும் பிடிக்கவும். உண்மைத் தன்மையை ஆராய்ந்து வாசகர்களுக்கு சரியான தகவலை கொடுப்பதில் கவனமாக இருப்பவன். உடல்நிலை தொடர்பான தகவலை வழங்குவதில் கூடுதல் கவனமாக இருப்பேன். 8 வருட செய்தித்துறை பயணத்தில் பல அனுபவத்தை கடந்து கற்றுத் தேர்ந்துள்ளேன். தான் வழங்கும் தகவலின் உண்மைத் தன்மையில் மிக கவனமாக இருப்பவன்.
View ProfileSenior Sub Editor
I'm Shanmathi Arun, I love to read health related articles & Books and now my passion is making others read mine. I Am a postgraduate However, Health and Wellness is my area of interest and I am presently pursuing a nutrition course because of my interest in health and wellness. I had worked earlier as a Tamil community lead for a mom and baby app ,and I am expert in pregnancy, parenting and also Pre Pregnancy topics. My aim is to educate women by giving the best and useful information. My mission is to make this community grow.
View ProfileSenior QC/QA
நான் சோபனா. படைப்புலகம் மற்றும் எழுத்து எனது சுவாசம் என்று கூறலாம். ஏழாம் வகுப்பு தொடங்கி இன்று வரை நான் படித்தவற்றை எனக்கு தெரிந்த அளவிற்கு எழுத பழகி அதுவே எனது வாழ்வியல் ஆகிவிட்டது. வாழ்க்கை முறை, அழகியல், மருத்துவம், ஆன்மீகம், சட்டம், மற்றும் கல்வி இதழியல் சார்ந்த துறைகளிலும் எட்டு வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகின்றேன். தமிழ் பட்டிமன்றங்களில் பேச்சாளராக இருந்துள்ளேன். குறும்பட இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். டிஜிட்டல் உலகை கையாள கற்றுக் கொண்டிருக்கிறேன்.
View ProfileSub Editor
என்னால் முடிந்த நல்ல மாற்றங்களை இவ்வுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே என் வாழ்க்கை லட்சியம். உணவை ரசித்து மட்டும் சாப்பிட்ட எனக்கு, உணவின் முக்கியத்துவத்தை புரியவைத்தது என் கணவர் தான். உண்ணும் உணவே மருந்து என்பதை முழுமையாக நம்புகிறேன். 3 ஆண்டுகளுக்கும் மேலாக கர்ப்பிணிகள், கர்ப்பம் தரிக்க திட்டமிடுவோர், குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் பெண்களின் பல கேள்விகளுக்கு என் எழுத்துக்கள் மூலமாக விடை அளித்துள்ளேன். ஆரோக்கியம் மீதான அக்கறையும், உணவின் மீதான அளவில்லாத காதலும் என்னை ஒரு ஆரோக்கியம் சார்ந்த எழுத்தாளராக மாற்றியுள்ளது. என்னுடைய எழுத்துக்கள் மூலமாக உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு இடையேயான அற்புத பந்தத்தை உலகமும் அறிய ஆசைப்படுகிறேன்.
View ProfileSenior Sub Editor
வணக்கம், என் பெயர் ஸ்ரீஜா குமார். கடந்த 8 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். பிரபல தொலைக்காட்சிகளான புதியதலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு போன்றவற்றின் டிஜிட்டல் வலைத்தளத்தில் துணை ஆசிரியராக பாணியாற்றி இருக்கிறேன். அதே போல் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டிஜிட்டல் தளத்திலும் கன்டென் ரைட்டராக இருந்துள்ளேன். சிறுவயதில் இருந்தே தமிழில் நன்றாக எழத கூடிய திறன் இருந்ததால் அதை தொழிலாக மாற்றிக்கொண்டேன். நிறைய புத்தக்கங்கள் வாசிப்பேன்.
View ProfileSub Editor
அனைவருக்கும் வணக்கம், நான் தமிழ்மலர். உள்ளடக்க எழுத்தாளராக எனது தொழிலை தேர்ந்தெடுத்தேன். நான் அடிப்படையில் ஒரு ஃபேஷன் பிரிக், எனவே அனைவரும் அதை ஆராய வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் நான் ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கிலும் உள்ளடக்கத்தை எழுதுகிறேன். இயற்கையில் நேரத்தை செலவிடுவதையும், அழகின் அனைத்து அற்புதமான தருணங்களையும் எனது கேமராவில் படம்பிடிப்பதையும் விரும்புகிறேன். இயற்கை புகைப்படம் எடுத்தல் சிறந்த பொழுதுபோக்கு என்று நான் நினைக்கிறேன், நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். சில நாட்களில் நான் திரைப்படங்களைப் பார்த்து நேரத்தை செலவிட விரும்புகிறேன். நான் தினமும் கடைப்பிடிக்கும் ஒரு பொன்மொழி 'உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்'.
View Profile