herzindagi
image

பளிச் பளிச் பாத்ரூமிற்கு இந்த பொருள் போதும்; சுத்தம் செய்தவுடன் பளபளக்கும்

உப்பு கறை, அழுக்கு, மஞ்சள் கறை நிறைந்த பாத்ரூமை பார்த்தால் அருவருப்பாக இருக்கும். பயன்படுத்தும் எண்ணம் வராது. பாத்ரூமை சுத்தமாக பராமரிக்கவும், பளிச்சென வைப்பதற்கும் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தினால் போதுமானது.
Editorial
Updated:- 2025-02-20, 17:18 IST

வீட்டின் சுகாதாரத்தை உறுதி செய்ய பாத்ரூமை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இயற்கை உபாதைகளை கழிக்கும் கழிவறையில் எப்போதுமே கிருமிகள் இருக்கும். வாரத்திர்கு இரண்டு முறை பாத்ரூமை சுத்தப்படுத்தினால் மட்டுமே அதை பயன்படுத்துவதில் தயக்கம் வராது. அதோடு பக்கெட் வைக்கும் இடத்தில் கறை, குழாய்களில் உப்பு கறை, ஆங்காங்கே அழுக்கு இருந்தால் என்ன பாத்ரூம் இவ்வளவு மோசமாக உள்ளதென நினைப்போம். இந்தியன் டாய்லெட், வெஸ்டர்ன் டாய்லெட்டில் இரசாயனம் பயன்படுத்தி கிருமிகளை அழிக்கலாம். எனினும் பாத்ரூமை பளிச்சிட செய்ய எல்லா நேரமும் இரசாயனம் தேவையில்லை.

shiny bathroom

பளிச் பாத்ரூம் : முறை 1

பொருட்கள் : பல் துலக்கும் பேஸ்ட், எலுமிச்சை சாறு, வினிகர், சமையல் சோடா

  • பத்து கிராம் பேஸ்ட்டுடன், அரை எலுமிச்சை பழ சாறு சேர்க்கவும். எலுமிச்சை இல்லையெனில் இரண்டு ஸ்பூன் வினிகர் பயன்படுத்தலாம். இதனுடன் அரை ஸ்பூன் சமையல் சோடா சேருங்கள்.
  • அனைத்தையும் ஸ்பூன் வைத்து கலக்கவும். இவை நன்றாக பொங்கி வரும்.
  • இதை சிறிய பிரஷ் வைத்து குழாய்களில் தேய்க்கவும். 5 நிமிடம் கழித்து தண்ணீர் ஊற்றி கழுவுங்கள். குழாய்களில் இருந்த உப்பு கறை, விடாப்பிடியான கறை நீங்கியிருக்கும்.

பளிச் பாத்ரூம் : முறை 2

பொருட்கள் : கோல மாவு, துணி சோப்பு பவுடர், சமையல் சோடா

  • அரை கப் கோல மாவை சல்லடையில் சலித்து எடுக்கவும். இதனுடன் தலா மூன்று ஸ்பூன் சமையல் சோடா, துணி சோப்பு பவுடர் சேர்த்து கலக்கவும்
  • உப்பு கறை, அழுக்கு படிந்துள்ள இடங்களில் இந்த கலவையை தூவுங்கள். பக்கெட் அடியில் துரு கறை இருக்கும்.
  • கோலம் போடும் போது தண்ணீர் தெளிப்பது போல பவுடர் மீது தண்ணீர் தெளித்து பத்து நிமிடங்களுக்கு காத்திருங்கள்.
  • அதன் பிறகு விளக்குமாறு வைத்து தரையில் தேய்க்கவும். ஸ்க்ரப்பர் வைத்தும் தரையை தேய்க்கலாம்.
  • நன்கு தேய்த்த பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். பாத்ரூம் தரை பளிச்சென மாறிடும். சமையல் சோடா துர்நாற்றத்தையும் நீக்கிடும்.

மேலும் படிங்க  Fridge Cleaning Tips : ஃபிரிட்ஜை முறையாக சுத்தம் செய்வதற்கான குறிப்புகள்

பளிச் பாத்ரூம் : முறை 3

பொருட்கள் : கம்ஃபர்ட் திரவம், எலுமிச்சை சாறு அல்லது ஷாம்பு, தண்ணீர்

  • ஒரு பாக்கெட் கம்ஃபர்ட் திரவம், ஒரு எலுமிச்சை பழ சாறு அல்லது ஒரு ரூபாய் பாக்கெட் ஷாம்பு எடுத்து கலந்து தண்ணீர் ஸ்ப்ரேவில் சேர்த்து நன்கு குலுக்கவும்.
  • 3 நாட்களுக்கு ஒரு முறை பாத்ரூமில் இந்த ஸ்ப்ரே அடிக்கவும். பாத்ரூமில் இருந்து துர்நாற்றம் வராது.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]