மகாசிவராத்திரி பிப்ரவரி 26, 2025 அன்று கொண்டாடப்படும். நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த நாளில் சிவனையும், அன்னை பார்வதியும் நினைத்து மனம் உருகி வணங்குவார்கள். இந்த நாளில் சிவபெருமான் பக்தர்கள் அவரை மகிழ்விக்கக் கோயிலுக்குச் செல்வார்கள். மேலும் வழிபாட்டின் போது வில்வ இலைகள் மற்றும் பூக்கள் கொண்டு வழிப்படுவார்கள். இந்த நாளில் மக்கள் சிவபெருமானுக்கு விரதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், மகாதேவை மகிழ்விக்க, வீட்டின் முற்றத்திலும், கோவிலின் வாயிலிலும் சிவலிங்கத்தின் கோலம் போடப்படுகிறது. இன்றைய கட்டுரையில், எளிமையான மற்றும் அழகான சிவலிங்க கோலத்தின் வடிவமைப்பைப் பற்றி பார்க்கலாம்.
10 புள்ளிகள் கொண்டு போடப்படும் சிவலிங்க கோலம்
இந்த கோலம் புள்ளிகள் வைப்பது முதல் லிங்க வடிவத்தை வரையும் வரை மிகவும் எளிமையாகப் போடப்படும் கோலமாகும். 10*10 புள்ளிகள் வைக்க வேண்டும், புள்ளிகளின் முனை பகுதியில் லிங்க வடிவத்தைத் தொடங்க வேண்டும். நான்கு பக்கத்திலும் அழகிய லிங்க வடிவத்தை வரைந்து முடித்ததும், இருக்கும் புள்ளிகளை எட்டு வடிவத்தையும், பூ வடிவத்தையும் போடலாம். புள்ளிகள் அனைத்தையும் முழுமையாக வரைந்த பிறகு, பிடித்த வண்ணங்களை நிரப்பு கோலத்தை முழுமையடையச் செய்யலாம்.
13 புள்ளிகள் கொண்ட தாமரை லிங்க கோலம்
இந்த கோலத்திற்கு முதலில் 13 புள்ளிகளில் தொடங்கி, 5 புள்ளிகளில் நிறைவு பெரும். கோலத்தின் நான்கு பக்கத்தில் லிங்கத்தை வரைந்து, லிங்கத்தின் அடிப்பகுதியில் சங்கு தாங்கிக்கொள்வது போல் வரைய வேண்டும். இரண்டு லிங்கத்தின் மையப்பகுதியில் தாமரை தாங்கிக்கொள்வது போலக் குத்துவிளக்கு வடிவத்தை வரைய வேண்டும். இந்த கோலத்தை முழுமையாக வரைந்த பிறகு உங்களுக்குப் பிடித்த வண்ணங்களைக் கொண்டு கோலத்தை முழுமையடைய செய்யுங்கள். இந்த சிவராத்திரிக்குச் சிறந்த கோலமாக இருக்கும்.
13 புள்ளிகள் கொண்ட திரிசூல லிங்க கோலம்
13 புள்ளிகளில் தொடங்கி 7 புள்ளிகளில் நிறைவு பெறும் இந்த அழகிய கோலத்தை எப்படி வரையாலாம் என்பதைப் பார்க்கலாம். புள்ளிகள் சுற்றி 6 லிங்கத்தை வரைய வேண்டும். லிங்கத்தின் மையப்பகுதியில் திரிசூலத்தை வரைய வேண்டும். மையப்பகுதியில் சிறிய பூக்களைக் கொண்டு முழுமை பெற செய்யவும். இந்த கோலம் உங்களுக்குத் தெய்வ வழிப்பாட்டிற்குச் சிறந்தது.
12 புள்ளிகளில் தொடங்கி 4 புள்ளிகள் கொண்ட லிங்க கோலம்
புள்ளிகளைச் சுற்றி 6 லிங்கம் வரைய வேண்டும், சிறியது, பெரியது என ஒன்றன்பின் ஒன்றாக வரைய வேண்டும். இதில் நான்கு லிங்கங்களைத் தாங்கும் தாமரை லிங்கம். லிங்கத்தின் மையப்பகுதியில் நட்சத்திரம் வரைந்து கோலத்தை முழுமையடையச் செய்யவும்.
மேலும் படிக்க: நம்மைக் காண வரும் உறவினர்களை வரவேற்க வீட்டு வாசலில் போடப்படும் காணும் பொங்கல் கோலங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation