நமது சமையலறையில் மிகவும் முக்கிய மசாலாப் பொருட்களில் ஒன்றான பூண்டுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இதன் முக்கியத்துவம் கருதி தான் நம்முடைய முன்னோர்கள் சாம்பார், ரசம் மற்றும் புளிக்குழம்பு என அனைத்திற்கும் ஒரு பல் பூண்டு உபயோகித்தார்கள். ஆனால் இதை உரிப்பது என்பது பெண்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். கைகளில் எரிச்சல், பிசுபிசுவென்று விரல்களில் பூண்டு ஒட்டிக்கொள்வது போன்ற பல சிரமங்கள் இருக்கும். இதைத் தவிர்க்க வேண்டுமா? இதோ கீழ்வரக்கூடிய எளிய ஹேக்குகளைப் பயன்படுத்தி கஷ்டமில்லாமல் பூண்டு உரித்துக் கொள்ளுங்கள்.
பூண்டு உரிக்க எளிய தந்திரங்கள்:
கை விரல்களில் ஒட்டாமலும், வாசனை வராமலும் பூண்டு உரிக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில், பெரிய பூண்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு பெரிய எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்து மூடிக்கொண்டு நன்கு குலுக்கிக் கொள்ளவும். ஒரு 30- 40 வினாடிகள் இவ்வாறு செய்யும் போது தோல் கொஞ்சம் கொஞ்சமாக உரித்துவிட்டு வரக்கூடும். பின்னர் கைகளில் வலியில்லாமல் சுலபமாக உரித்தெடுக்கவும்.
தண்ணீரில் ஊற வைத்தல்: பூண்டு உரிக்க ஆரம்பிக்கும் முன்னதாக முழு பூண்டை எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். சில நிமிடங்களுக்குப் பிறகு எடுத்து உரித்தால் கைகள் ஒட்டாமல் சீக்கிரமாக உரித்துவிட முடியும்.
மைக்ரோவேவ் பயன்படுத்துதல்: அடுத்ததாக பூண்டு உரிக்க மைக்ரோவோப் பயன்படுத்தலாம். ஒரு 10 பூண்டுக்கு மேலாக இருந்தாலும் ஒரு பவுலில் போட்டு 30 வினாடிகள் சூடேற்றிக் கொள்ள வேண்டும. மிதமான சூடு வந்தவுடன் லேசாக பூண்டு உரிக்கவும்.
கத்தியைப் பயன்படுத்துதல்: சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு முறை பூண்டு உரிக்கும் போது கத்தியைப் பயன்படுத்துங்கள். இதை வைத்து பூண்டு நுனி பகுதியை லேசாக வெட்டிக் கொண்டு உரித்தெடுக்கவும்.
மேலும் படிக்க:Bread upma recipe: வெறும் 5 நிமிடம் போதும்..ருசியான பிரட் உப்புமா ரெடி!
ஒரு கடாயை அல்லது பாத்திரத்தை சூடேற்றி பூண்டு பற்களை அப்படியே போட்டு சில நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். பின்னர் சூடு ஆறியதும் மிகவும் சுலபமாக பூண்டு பற்களை உரிக்கவும். இதுபோன்ற வழிமுறைப் பின்பற்றி இனி எவ்வித சிரமமும் இல்லாமல் பூண்டு பற்களை வெறும் 2 நிமிடங்களில் உரித்துக்கொள்ளுங்கள்.
பூண்டு ஏன் இன்றியமையாதது?
பூண்டில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், நார்ச்சத்துக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது உடலின் இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பவர்கள் தினமும் பச்சை பூண்டு சாப்பிடலாம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்கள் தினமும் பூண்டு பால் குடிக்கும் போது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.
Image credit - pexels
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation