herzindagi
women prepare upma

Bread upma recipe: வெறும் 5 நிமிடம் போதும்..ருசியான பிரட் உப்புமா ரெடி!

தென்னிந்திய உணவுகளில் பிரபலமான ரவா, சேமியா , இட்லி உப்புமாவிற்கு மாற்றாக உள்ளது பிரட் உப்புமா.
Editorial
Updated:- 2025-07-22, 11:58 IST

காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக ஏதாவது  சமைத்துவிட்டு பணிக்குச் செல்லலாம் என்ற எண்ணம் வரும். வழக்கம் போல இட்லி, தோசை, பொங்கல்,உப்புமா தான் பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இருக்கும். ஒரே மாதிரியாக சாப்பிடும் போது ப்ரேக் பாஸ்ட் கண்டிப்பாக சாப்பிட வேண்டுமா? என்று யோசிக்கத் தொடங்கிவிடுவோம்.

குறிப்பாக சில நேரங்களில் வீட்டில் உள்ள குழந்தைகளும் சளிப்புடன், அம்மா வேற ஏதாவது சாப்பாடு செஞ்சுத்தாங்களேன்னு  என்று கேட்பார்கள். ஆனால் என்ன? அவசர கதியில் வயிறு நிறைந்தால் போதும் என்பது தான் நினைப்போம். இதுப்போன்ற பிரச்சனை இனி வராது. உங்கள் குழந்தைகளுக்கு வெரைட்டியாக காலை உணவை செய்துக் கொடுக்க வேண்டும் என்றால் பிரட் உப்புமா உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். அதுவும் அவர்களுக்குரிய விருப்பமான நூடுல்ஸ் போன்று வெறும் 5 நிமிடத்தில் நீங்கள் செய்துவிட முடியும். இதோ உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்…

recipes upma preparing

தேவையானப் பொருள்கள்:

  • பிரட் - 5 துண்டுகள்
  • பெரிய வெங்காயம் -  அரை கப் (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள்- சிறிதளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • உப்பு- சுவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  •  கடுகு - அரை ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு- அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் / வர மிளகாய் - 1

பிரட் உப்புமா செய்முறை:

  • முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் வாணல் சூடேறியதும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • இதையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிதுநேரம் வதக்கவும். இதோடு இஞ்சி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
  • பொன்னிறமாக வந்ததும், பொடியாக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வேக வைத்தால் போதும். சுவையான பிரட் உப்புமா ரெடி.

tasty of bread upma

குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைளில் ஒன்றாக உள்ளது உப்புமா. பலருக்கு இதன் சுவை சுத்தமாகப் பிடிக்காது என்றாலும் இதை விரும்பிச்சாப்பிடும் ஓர் கூட்டமும் உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் உங்களது வீடுகளில் சீக்கிரம் ரெடியாகும் பிரட் உப்புமாவை ருசித்துப் பாருங்கள். ரவா உப்புமா,  சேமியா உப்புமா, இட்லி உப்புமாவிற்கு நிச்சயம் ஒரு நல்ல மாற்றாகவே அமையும்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]