herzindagi
image

பருப்பு உருண்டை குழம்பு : சுவையும் மணமும் மிகுந்த பாரம்பரிய முறையில்

எல்லோருக்கும் பிடித்தமான பருப்பு உருண்டை குழம்பினை மிகுந்த சுவையில் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். பருப்பு உருண்டை குழம்பு செய்வதற்கு தரமான கடலைப் பருப்பு பயன்படுத்துங்கள்.
Editorial
Updated:- 2025-04-15, 16:31 IST

வேலைக்கு செல்லும் காரணத்தில் குழம்பு வைப்பது சிரமம் என கருதி சில அற்புதமான உணவுகளை தவறவிடுகிறோம். தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்களுக்கும் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் ஆகியவற்றுக்கு பழகி வருகிறோம். என்ன இருந்தாலும் தேங்காய் அரைத்து காரசாரமாக மசாலா பொருட்கள் சேர்த்து குழம்பு வைத்து சாப்பிடும் சுவை வேறு எதிலும் கிடைக்காது. மிகவும் ருசி மிக்க பாரம்பரிய உணவுகளில் பருப்பு உருண்டை குழம்பும் ஒன்று. சுட சுட சாதத்தில் பருப்பு உருண்டை வைத்து இரண்டு கரண்டி குழம்பு ஊற்றி மேலே நல்லெண்ணெயுடன் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த பதிவில் பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.

paruppu urundai kulambu recipe

பருப்பு உருண்டை குழம்பு செய்ய தேவையானவை

  • கடலை பருப்பு
  • குண்டு மிளகாய்
  • வெங்காயம்
  • மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • கடலெண்ணெய்
  • கடுகு
  • வெந்தயம் கறிவேப்பிலை
  • பூண்டு 
  • தக்காளி 
  • புளி
  • வெல்லம் 
  • தேங்காய்
  • சோம்பு 
  • சீரகம்

பருப்பு உருண்டை குழம்பு செய்முறை

  • கடலைப் பருப்பு 200 கிராம், பத்து குண்டு மிளகாய், இரண்டு ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி கொரகொரப்பாக அரைக்கவும். 
  • இதில் பொடிதாக நறுக்கிய அரை வெங்காயம், கீறி போட்ட ஒரு மிளகாய், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு இட்லி பாத்திரத்தில் இட்லி வேக வைப்பது போல் 10-12 நிமிடங்களுக்கு வேக விடவும். 
  • குழம்பு செய்வதற்கு கடாயில் ஐந்து ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு ஒரு ஸ்பூன், நான்கு குண்டு மிளகாய், அரை டீஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய், இடித்த பூண்டு பத்து, பொடிதாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் போட்டு வறுக்கவும். 
  • வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு ஒரு தக்காளி, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கலந்துவிட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றங்கள். 
  • பச்சை வாசனை போன பிறகு 50 கிராம் புளியை 100 மில்லி தண்ணீரில் கரைத்து ஊற்றவும். புளி தண்ணீரின் வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
  • இறுதியாக 20 கிராம் வெல்லம் சேர்த்து மீண்டும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்கவிடுங்கள். 
  • இதனிடையே ஒரு மூடி துருவிய தேங்காய், தலா ஒரு ஸ்பூன் சோம்பு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து குழம்பில் ஊற்றவும். 
  • குழம்பு நன்கு கொதிக்கும் நேரத்தில் வேக வைத்த பருப்பு உருண்டையை போடவும். அடுப்பை ஆஃப் செய்து 10-15 நிமிடங்களுக்கு பிறகு பரிமாறவும். 
  • பருப்பு உருண்டைக் குழம்பின் முழு சுவையை உணர்வீர்கள். 

மேலும் படிங்க  மண்சட்டியில் நெத்திலி மீன் குழம்பு செய்முறை; வாசனை மூக்கை துளைக்கும்

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]