herzindagi
image

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காய எண்ணெய்; உங்கள் வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்

முடி வளர்ச்சியை இயற்கையான முறையில் அதிகரிக்கும் வெங்காய எண்ணெய்யை வீட்டிலேயே எப்படி சுலபமான முறையில் தயாரிக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இதை செய்வது மிகவும் எளிதாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-11-09, 10:46 IST

முடி வளர்ச்சிக்கு வெங்காய எண்ணெய் ஒரு அற்புதமான தீர்வு என்று நம் முன்னோர் கூறிய கதைகளை நாம் அனைவரும் கேட்டிருப்போம். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், கெரட்டின் என்ற புரதத்தின் முக்கிய அங்கமாகும்.

மேலும் படிக்க: தயிர் இருந்தால் போதும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம்!

 

இது நமது தலைமுடியை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். மேலும், வெங்காய எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்க்கும் போது, அது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த எளிமையான செய்முறையை கொண்டு வீட்டிலேயே வெங்காய எண்ணெய்யை தயாரிக்கலாம்.

Onion oil uses

 

தேவையான பொருட்கள்:

 

தேங்காய் எண்ணெய் - 500 மில்லி கிராம்,

 

வெங்காயம் - 2 (நறுக்கியது),

 

கறிவேப்பிலை - 15 முதல் 20,

 

வெந்தயம் - 10 முதல் 15 மற்றும்

 

பூண்டு - 10 பல்.

மேலும் படிக்க: பொலிவான சருமத்திற்கு உதவும் 5 பாரம்பரிய பொருட்கள்; உங்கள் சரும பராமரிப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்

 

செய்முறை:

 

முதலில், ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மிதமான நெருப்பில் சூடாக்கவும். இதில், வெங்காயம் பழுப்பு நிறமாக மாறும் வரை சூடாக்க வேண்டும். இதற்கடுத்து, அடுப்பை அனைத்து விட்டு இந்தக் கலவையை ஆறவைக்க வேண்டும். இதன் பின்னர், இறுதியாக எண்ணெய்யை மட்டும் வடிகட்டி காற்று நுழையாத பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் நமக்கு தேவையான வெங்காய எண்ணெய் தயாராகி விடும்.

Onion oil benefits

 

பயன்படுத்தும் முறை:

 

இந்த எண்ணெய்யை வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து, மூன்று மணி நேரம் ஊறவிடவும். அதன் பிறகு, சல்ஃபேட் மற்றும் பாராபென் இல்லாத ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் ,மூன்றில் இருந்து நான்கு மாதங்களில் முடி வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காணலாம். எனினும், வெங்காய எண்ணெய்யை பயன்படுத்தும் போது அதில் இருந்து ஒரு விதமான வாசனை வரக்கூடும் என்பதால், அந்த நேரத்தில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்த்து விடலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]