இந்தியாவில் முகலாய காலத்தில் உருவான அனார்கலி உடை வளமான கலாச்சாரத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்து ஆடம்பரத்திற்கு பெயர் பெற்ற உடையாக உள்ளது. பேரரசர் அக்பரின் அரசவையில் இருந்த அனார்கலி என்பவரின் பெயரால் இந்த உடைக்கு அனார்கலி என்று பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது போன்று பல வரலாற்று சிறப்பம்சங்களை கொண்ட அனார்கலி உடை தற்போது நவீன வடிவமைப்புகளுடன் இணைந்து ஃபேஷன் உலகில் தவிர்க்கமுடியாத ஆடையாக மாறியுள்ளது.
அனார்கலி உடை அதன் கனமான எம்பிராய்டரி, பிரிண்டெட் டிசைன்கள், பிரகாசமான வண்ணங்கள் மற்றும் கண்ணாடி பொருத்தங்களுக்காக பெயர்பெற்றது. எந்தவொரு விழாவாக இருந்தாலும் உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற வசதியான, அழகான மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தை பெற அனார்கலி சரியான தேர்வாக இருக்கும்.
நீங்கள் பாரம்பரியத்துடன் நவீன பாணியில் தோற்றமளிக்க விரும்பினால் இந்த வகை அனார்கலி உடையை அணியலாம். இது போன்ற ஸ்லீவ்லெஸ் அல்லது பெல் ஸ்லீவ்ஸ் அனார்கலி சிவப்பு, அம்பர் அல்லது பீச் நிறங்களில் அழகாக இருக்கும்.
சிறு சிறு கண்ணாடி கொண்ட இந்த வகையான அனார்கலியை அணிவது உங்களுக்கு ஸ்டைலான மற்றும் அரச தோற்றத்தை தரும். இதை நீங்கள் பகல் நேர விழாக்களில் அணிய சரியான தேர்வாக இருக்கும். இத்துடன் வெள்ளி ஆபரணங்கள் அணிவது உங்கள் தோற்றத்தை மிகவ அழகாக மாற்றும்.
மேலும் படிக்க: குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியனுமா? இந்த மாதிரி டிரஸ் பண்ணுங்க போதும்
இது போன்ற ஃப்ளோரல் அனார்கலி டிசைன்கள் உங்களுக்கு அழகான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும். திருமண நிகழ்ச்சி அல்லது வரவேற்பு போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் இந்த உடையை அணிவதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கலாம்.
சிக்கன்காரி எம்ப்ராய்டரிடன் கூடிய இந்த ஆலிவ் பச்சை நிற அனார்கலி உங்களுக்கு மிகவும் அழகாகவும், கிளாசியாகவும் இருக்கும். நம் தோற்றத்தை மெருகேற்ற காதணிகள், வளையங்கள் மற்றும் மோதிரத்தை இந்த அனார்கலியுடன் இணைக்கலாம்.
மிகவும் ஆடம்பரமாக இல்லாமல் எளிமையாக மற்றும் நேர்த்தியாக தோற்றமளிக்க விரும்பினால் முழு ஸ்லீவ் உடன் கூடிய V-நெக் அனார்கலியை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த V-நெக் அனார்கலி உங்கள் அழகிற்கு எடுப்பாக இருக்கும்.
கோல்ட் ஷோல்டர் கட் அவுட் அனார்கலி டிசைன்கள் உங்களை பாரம்பரிய தோற்றத்தில் தனித்துவமாக விளங்க செய்யும். இதன் மேற்புறத்தில் உள்ள வெள்ளி எம்பிராய்டரி இந்த அனார்கலிக்கு எடுப்பான தோற்றத்தை அளிக்கிறது.
மேலும் படிக்க: அணிந்தால் ராணியின் தோற்றத்தைத் தரக்கூடிய லேட்டஸ்ட் குந்தன் நகை டிசைன்கள்
மாடர்ன் மங்கையாக உங்களை வெளிப்படுத்திக்கொள்ள தற்போது ட்ரெண்டில் உள்ள பிளங்கிங் நெக் அனார்கலி உடையை தேர்வு செய்யலாம். இந்த உடையுடன் கனமான காதணிகள் மற்றும் அதற்குப் பொருத்தமான வளையல்களை அணிந்தால் நீங்கள் இளவரசியைப் போல தோற்றமளிப்பீர்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]