நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அனைவரையும் நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவைக் கொண்டாடிவருகிறோம். இந்த நாளை மேலும் சிறப்பாக்கும் விதமாக ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்கள் சுதந்திர தின விழா பற்றியும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் பேசுவார்கள். உங்களுக்கும் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், என்ன பேச வேண்டும் என்ற குழப்பம் உள்ளதா? அப்படியென்றால் இதோ உங்களுக்கான சில சுதந்திர தின உரைகள் இங்கே.
பள்ளி மாணவர்களுக்கான சுதந்திர தின உரை:
சுதந்திர தினம் என்றாலே அனைத்துப் பள்ளிகளிலும் மூவர்ண கொடி ஏற்றியுவுடன், மாணவர்களில் சில சுதந்திர தினம் குறித்து உரையாடுவார்கள். தங்களுடைய மழலைக்குரலில் சுதந்திரம் குறித்து பேசும் போது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அவ்வளவு அழகாக இருக்கும். இதுபோன்று உங்களது குழந்தைகளும் பேச வேண்டும் என்ற ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கான சில ஐடியாக்கள் இங்கே.
நாட்டு விடுதலையில் காந்தியின் பங்கு:
சபையில் கூடியுள்ள என்னுடைய ஆசான்களுக்கும், என்னுடன் பயிலும் சகோதர சகோதரிகளுக்கும் முதலில் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு நாம் பேச விருக்கும் தலைப்பு நாட்டு விடுதலையில் காந்தியின் பங்கு. இந்திய சுதந்திரம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தி தான். அப்படி என்ன செய்தார் என்று தானே கேட்கிறீர்கள்? இதோ இங்கே விரிவாக பார்க்கலாம்.
1608 ல் இந்திய நாட்டில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், நமது நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்படுத்தத் தொடங்கினர். நாடே பஞ்சம் மற்றும் பட்டினியில் தவித்து வந்த சூழலில் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி நமது செல்வங்கள் அனைத்தையும் சுரண்ட ஆரம்பித்துவிட்டனர். நமது சொந்த மண்ணில் வாழ்வதற்கே வரிக்கட்ட சொன்னார்கள். இதை எதிர்த்து போராடிய தலைவர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கினார் மகாத்மா காந்தி. அன்னிய துணிகளைப் பயன்படுத்த மாட்டோம் என்ற கோஷத்துடன் உப்பு சத்தியாகிரகம், அமிச்சை போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற பல போராட்டங்களை நடத்தி ஆங்கிலேயரை கொஞ்சமாக கொஞ்சமாக வெளியேற வைத்தார் காந்தி.
இதே போன்று நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களைக் கௌரவிக்கும் வகையில் சுதந்திர தினத்தில் தலைவர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசலாம். குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் தொடங்கி ஜான்சி ராணி, வேலுநாச்சியார், சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங் போன்ற தலைவர்களைப் பற்றி உரையாடலாம். மேலும் அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை எப்படியெல்லாம் இன்றைய இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த தலைப்புகளிலும் பேசலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation