இந்தியாவில் பெருமளவில் பாதிப்படைந்துவரும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது குழந்தைகளின் மனநலம். சின்ன சின்ன விஷயங்களுக்கு அடம்பிடிப்பது முதல் அதிக நேரம் மொபைல் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் போது அவர்களை அறியாமலேயே மன ரீதியாக பாதிப்பை சந்திக்கிறார்கள். இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? உளவியல் ரீதியாக குழந்தைகளை எப்படி கையாள வேண்டும்? என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே.
குழந்தைகளைக் கையாள்வதற்கான உளவியல் முறைகள்:
முந்தைய காலங்கள் போன்றில்லை. இப்போதெல்லாம் சிறு வயது குழந்தைகளைக் கூட சமாளிப்பது அவ்வளவு கஷ்டமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பெற்றோர்களாகிய நாம் தான். தனக்குக் கிடைக்காத விஷயங்கள் அனைத்தும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைத்து கேட்டதை வாங்கிக் கொடுக்கிறார்கள். ஒருநாள் தனக்குத் தேவையானது கிடைக்காமல் போகும் போது மனதளவில் சோர்வை சந்திக்கின்றனர். இந்த சூழலில் தான் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை தேவைப்படுகிறது.
விளையாட்டு சிகிச்சை:
விளையாட்டு என்பது குழந்தைகளுக்குக் கட்டாயம் தேவை. முன்பெல்லாம் பள்ளி முடித்துவிட்டு விளையாடிய பின்னர் தான் குழந்தைகள் வீட்டிற்குச் செல்வார்கள். நன்றாக விளையாடும் போது மூளை புத்துணர்ச்சியாகிறது. குறிப்பாக உறவினர்கள் அல்லது பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து விளையாடும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஏற்படுகிறது. தனக்குத்தான் எல்லாம் வேண்டும் என்ற மனநிலையும் மாற்றி விட்டுக்கொடுக்கும் எண்ணமும் தானாக ஏற்படுகிறது.
குடும்ப சிகிச்சை:
உளவியல் ரீதியாக குழந்தைகளைக் கையாள வேண்டும் என்று நினைத்தால் குடும்ப சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இது ஒன்றும் மருந்துவ ரீதியான செயல்பாடுகள் இல்லை. உங்களது குழந்தைகளைத் தனியாக விட்டு விட வேண்டும். பணி நிமிர்த்தமாக வெளியில் இருந்தாலும் மாதத்திற்கு அல்லது முடிந்தால் வாரத்திற்கு ஒருமுறையாவது தாத்தா- பாட்டி அல்லது உறவினர்களின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடி மகிழும் போது மனம் அமைதி பெறுகிறது. மற்றவர்கள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்? நாமும் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையைப் பெறுவதற்கு உதவுகிறது.
மேலும் படிக்க:வீட்டில் குழந்தைகள் சண்டையிட்டால் அதை தீர்த்து வைக்க பெற்றோர் செய்ய வேண்டியவை
மொபைல் பயன்பாட்டைத் தவிர்த்தல்:
மொபைலைப் பயன்படுத்தும் ஒவ்வொரு குழந்தைகளும் உளவியல் ரீதியாக பாதிப்பைச் சந்திக்கிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பது, சூட்டிங் கேம் என விளையாடும் போது மூளையின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் கொஞ்ச நேரமாவது அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
இதுபோன்ற செயல்பாடுகளுடன் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளக் கொடுப்பது, 8 மணி நேரத்திற்கு மேலாக நல்ல தூக்கத்தை ஏற்படுத்தித் தருவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்த முயற்சி செய்யுங்கள். நிச்சயம் குழந்தைகள் சந்தோஷமான மனநிலையை அடைவார்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation