herzindagi
image

மழைக்காலத்தில் பயணம் மேற்கொள்ள இருக்கிறீர்களா? இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

மழைக்காலத்தின் போது பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் இந்தக் குறிப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
Editorial
Updated:- 2025-11-12, 10:57 IST

மழைக்கால பயணம் என்பது அழகாக இருந்தாலும் சில சமயங்களில் சீரற்ற சாலைகள், தாமதங்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் போன்ற சில சவால்களையும் ஏற்படுத்தும். உங்கள் மழைக்கால பயணத்தை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கான சில அத்தியாவசிய குறிப்புகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: தனியாக பயணம் செய்வதில் விருப்பம் கொண்டவரா நீங்கள்? இந்தியாவில் அவசியம் பார்க்க வேண்டிய 5 இடங்கள்

 

பயணத்திற்கு முன் வானிலை குறித்து அறிந்து கொள்ளவும்:

 

கனமழையால் சாலைகள் அடைக்கப்படலாம், நிலச்சரிவுகள் ஏற்படலாம் அல்லது விமானங்கள் தாமதமாகலாம். எனவே, பயணத்தை தொடங்கும் முன் நம்பகமான வானிலை செயலிகள் அல்லது இணையதளங்கள் மூலம் வானிலை நிலவரத்தை சரிபார்க்கவும். நீங்கள் செல்லும் இடத்தில் கனமழைக்கான எச்சரிக்கை இருந்தால் பயணத்தை ஒத்திவைப்பது சிறந்தது.

Travel

 

மழைக்காலத்திற்கு ஏற்ற பொருட்களை எடுத்து செல்லுங்கள்:

 

குடைகள், நீர் நுழையாத பைகள் மற்றும் விரைவாக உலரும் ஆடைகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். மொபைல் போன், ஆவணங்கள் மற்றும் சார்ஜர்கள் போன்ற முக்கியமான பொருட்களை பாதுகாப்பாக வைக்க ஜிப்-லாக் பைகளை பயன்படுத்துங்கள்.

 

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்:

 

மழைக்காலத்தில் எப்போதும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரையே குடிக்கவும். மழையில் நனைந்த, திறந்தவெளியில் உள்ள சாலையோர உணவுகளை தவிர்ப்பது நல்லது. அத்தியாவசிய மருந்துகள், கிருமிநாசினி, கொசு விரட்டி போன்றவற்றை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

மேலும் படிக்க: தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க மின்சார ரயில் திட்டம்; எந்தெந்த ஊர்களுக்குத் தெரியுமா?

 

வாகனம் ஓட்டும் போது கவனம்:

 

பயணத்தை தொடங்கும் முன் உங்கள் வாகனத்தின் டயர்கள், பிரேக்குகள், ஹெட்லைட்கள் மற்றும் வைப்பர்கள் ஆகியவற்றை சரிபார்க்கவும். குறிப்பாக, ஈரமான அல்லது மலைப்பாதைகளில் மெதுவாக வாகனம் ஓட்டுங்கள். நிலச்சரிவு அல்லது வெள்ளம் அதிகம் ஏற்படும் பகுதிகளை தவிர்ப்பது நல்லது.

 

பாதுகாப்பான தங்குமிடங்களை தேர்ந்தெடுக்கவும்:

 

வெள்ளம் வர வாய்ப்பில்லாத, பாதுகாப்பான பகுதிகளில் உள்ள ஹோட்டல்களை முன்பதிவு செய்யுங்கள். மின்வெட்டு ஏற்படும் போதும் அடிப்படை வசதிகள் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்த, ஹோட்டல் குறித்த ஆன்லைன் விமர்சனங்களை படிப்பது உதவும்.

Travel in train

 

நீர்நிலைகளுக்கு அருகில் கவனம் தேவை:

 

மழைக்காலத்தில் நீர்நிலைகள் அபாயகரமானவை. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான, கண்காணிக்கப்படும் பகுதிகளுக்கு மட்டும் செல்லவும். இந்த பருவத்தில் நீர்நிலைகளின் அழகை தூரத்தில் இருந்து ரசிப்பதே சிறந்தது.

 

மழைக்கால பயணத்தின் சவால்களை அறிந்து, அதற்கேற்ப திட்டமிட்டால் இந்த சீசனின் அழகை முழுமையாக அனுபவிக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]