வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நீரில் மூழ்கிவிடலாம் எனத் தோன்றும். தமிழகத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சிகளுக்கு பஞ்சமே கிடையாது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க விரும்பினால் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள நீர்வீழ்ச்சி தலங்களுக்கு நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் சுற்றுலா சென்று நேரத்தை செலவிடவும்.
தமிழகத்தின் டாப் 5 நீர்வீழ்ச்சிகள்
பைக்காரா அருவி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பைக்காரா அருவியும் ஒன்று. உதகை அருகே பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்து 55 மீ மற்றும் 61 மீ உயரத்தில் இருந்து கொட்டுகின்றது. பைக்காரா அருவி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணிக்கு அனுமதி உண்டு. படகு சவாரி செல்ல கட்டணமாக 175 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
தமிழக கர்நாடக எல்லையில் காவிரி ஆற்றில் அமைந்துள்ள ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியை பற்றி அறியாத தமிழர்களே இருக்க முடியாது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து பொழுதுபோக்குவது உண்டு. மிதமான நீர் ஓட்டம் இருக்கும் நேரத்தில் படகு சவாரிக்கு அனுமதி உண்டு.
குற்றாலம்
தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை நீர்வீழ்ச்சிகள், இனிமையான வானிலை மற்றும் இடைவிடாத மழைக்காலம் சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கம் போல் தெரிகிறது.
மெயின் அருவி, சிற்றருவி, ஐந்தருவி, குண்டாறு நீர்வீழ்ச்சி, புலியருவி, பழைய குற்றாலம், செண்பகாதேவி நீர்வீழ்ச்சி என குற்றாலத்தின் சிறப்புகளை அடுக்கி கொண்டே போகலாம்.
மேலும் படிங்கமதுரைவாசிகளே ரெடி ஆகுங்க... ரூ.3 கோடி செலவில் தயாராகும் குட்லாடம்பட்டி அருவி! உற்சாக குளியல் போடலாம்....
கோவை குற்றாலம்
கோவை குற்றாலம் சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றிய மென்மையான நீர்வீழ்ச்சி ஆகும். கோவையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இந்த நீர் வீழ்ச்சியை மேல் பகுதி சிறுவானி அணை உள்ளது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறை அவசியமாகும். கோவைக்கு மிக அருகில் உள்ள நீர்வீழ்ச்சி இது மட்டுமே.
திற்பரப்பு நீா்வீழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவி உலகப் புகழ்பெற்றது.
திற்பரப்பு அருவி நாகா்கோவிலிலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளதால் இரு மாநிலத்தவரும் இங்கு வருகை தந்து உற்சாக குளியல் போடுகின்றனர். அருவி 50 அடி உயரம் கொண்டது. வருடத்தில் 7 மாதம் இந்த அருவி அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation