மதுரைவாசிகளே ரெடி ஆகுங்க... ரூ.3 கோடி செலவில் தயாராகும் குட்லாடம்பட்டி அருவி! உற்சாக குளியல் போடலாம்....

மதுரையின் குற்றாலம் என்றழைக்கப்படும் குட்லாடம்பட்டி அருவி கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக மூடப்பட்டு இருக்கிறது. சீரமைப்பு பணிகளுக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருட இறுதிக்குள் குட்லாடம்பட்டி அருவி மீண்டும் திறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
image

100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகும் மதுரை மாவட்டத்தில் உற்சாக குளியல் போட்டு மகிழ சுற்றுலாத் தளம் உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? ஆம் மதுரையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் சிறுமலை தொடரில் நீர்வீழ்ச்சி ஒன்று அமைந்துள்ளது. பெரும்பாலான மதுரைவாசிகளுக்கு இந்த இடம் நன்கு தெரியும். இதற்கு குட்லாடம்பட்டி அருவி, தாடகை நாச்சியம்மன் நீர்வீழ்ச்சி என பெயர்கள் உண்டு. உங்களிடம் 100 ரூபாய் இருந்தால் போதும் வார விடுமுறையில் இந்த அருவிக்கு சென்று உற்சாக குளியல் போட்டு மகிழலாம். இது மதுரையின் குற்றாலம் எனவும் பெயர் பெற்றது.

kutladampatti

குட்லாடம்பட்டி அருவி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டி.மேட்டுப்பட்டி ஊராட்சி பகுதியில் குட்லாடம்பட்டி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை சீசன் காலம் ஆகும். சுமார் 27 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் அர்ப்பரித்து கொட்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான கட்டணம் 10 ரூபாய் மட்டுமே. நுழைவு வாயிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து அருவியை சென்றடைய வேண்டும். உள்ளே செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன.

போக்குவரத்து வசதி

மதுரையில் இருந்து பெரியகுளம் செல்லும் பேருந்தில் ஏறுங்கள். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து புறப்படும். 20 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து வாடிப்பட்டியில் இறங்கவும். வாடிப்பட்டியில் இருந்து குட்லாடம்பட்டிக்கு செல்ல பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. வாடிப்பட்டியில் இருந்து குட்லாடம்பட்டியின் தூரம் 5 கிலோ மீட்டர் மட்டுமே. மதுரை - வாடிப்பட்டிக்கு அதிகபட்சமாக 30-35 நிமிடங்கள் எடுக்கும்.

6 வருடங்களாக மூடல்

தென் மாவட்டங்களை கஜா புயல் தாக்கிய போது குட்லாடம்பட்டி அருவி பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு கம்பங்களும், தடுப்புகளும் சேதமடைந்தன. குளிக்கும் இடமும் பாதுகாப்பாக இல்லை. இதன் காரணமாக வனத்துறை கடந்த 6 வருடங்களாக யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. ஒரு சில இளைஞர்கள் ஆர்வமிகுதியில் அருவியில் சென்று குளிக்கின்றனர்.

குட்லாடம்பட்டி அருவி திறப்பு எப்போது ?

இந்த நிலையில் மதுரை மாவட்ட வனத்துறையும், சுற்றுலாத்துறையும் அருவி பகுதியை சீரமைக்க நிதி கோரியது. தமிழக அரசும் 3 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த பணத்தில் தடுப்புகள், கம்பங்கள், உடை மாற்றும் அறை, கழிவறை, வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2024 இறுதிக்குள் பணிகள் நிறைவுபெற்று ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP