உத்தர சுவாமிமலை என அறியப்படும் மலை மந்திர் தலைநகர் டெல்லியில் உள்ள பிரபலமான முருகன் கோயிலாகும். மலை மந்திர் என்றால் டெல்லியில் மலை உள்ளதா என சந்தேகிக்காதீர்கள். இந்த உத்தர சுவாமிமலை கோயில் 111 உயர அடி மலை மீது அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுவாமிநாதன் ஆவார். தினந்தோறும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இங்கு வந்து முருகனை வழிபட்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என முழக்கமிடுகின்றனர். இந்த கோயிலில் சிறப்புகள் மற்றும் கட்டப்பட்ட வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
உத்தர சுவாமிமலை வரலாறு
டெல்லியில் உத்தர சுவாமிமலை கோயில் கட்டுவதற்கான அடிக்கல் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் பக்தவாசலத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக நடைபெற்ற விழாவில் பிரதம மந்திரி ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரியும் கலந்து கொண்டார். 1973 ஜூன் 7ஆம் தேதி சுவாமிநாத சுவாமி கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 1990 ஜூன் 13ஆம் தேதி முருகனின் அண்ணன் விநாயகர், ஸ்ரீ சுந்தரேஸ்வரர், தேவி மீனாட்சிக்கு சன்னதிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மலை மந்திரில் ஏராளமான முருக பக்தர்கள் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர்.
உத்தர சுவாமிமலை கட்டடக்கலை
முருகன் மலை மீது குடி கொண்டிருப்பார் என்ற அடிப்படையில் இந்த கோயில் மலை மீது கட்டப்பட்டது. ஒவ்வொரு கோயிலிலும் முருகனுக்கு சிறப்பு முழக்கம் இருக்கும். அந்த வகையில் சுவாமிநாத சுவாமி கோயிலில் யாமிருக்க பயமேன் என எழுதப்பட்டு இருக்கும். மூலவர் சன்னதி சோழர் காலத்து கட்டடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. உள்ளே கற்பக விநாயகர், சுந்தரேஸ்வரர், தேவி மீனாட்சி சன்னதிகள் பாண்டியர் காலத்து கட்டடக் கலையை பிரதிபலிக்கின்றன. முருகனின் வாகனம் மயில் என நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இக்கோயில் நிர்வாகம் சார்பாக மயில் தத்தெடுக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் மயிலை நாம் சில நேரங்களில் காண முடியும்.
மேலும் படிங்கதிருப்பம் தரும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் வரலாறும், சிறப்புகளும்
டெல்லிக்கு வருகை தரும் தமிழர்கள் இக்கோயிலில் தவறாமல் தரிசனம் செய்ய வேண்டும். வசந்த் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மலை மந்திர் அமைந்துள்ளது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation