-1763027257533.webp)
கார்த்திகை மாதம் என்றாலே முருக வழிபாடும், தீப ஒளி திருநாளும் அனைவருக்கும் நினைவுக்கு வரக்கூடும். பொதுவாக அனைத்து மாதங்களிலும் தீபம் ஏற்றி வழிபாட்டாலும், கார்த்திரைக மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. பெரிய கார்த்திகைக்கு மட்டுமல்ல கார்த்திகை மாதம் முழுவதும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறுவதோடு, அனைத்து மங்கள காரியங்களும் நிறைவேறும். ஒருவேளை கார்த்திகை மாதம் முழுவதும் தங்களால் விளக்கேற்ற முடியவில்லை என்ற கவலைப்படும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்களா? இனி அந்த கவலை வேண்டாம். துவாதசி, சதுர்த்தி,பௌர்ணமி போன்ற நாட்களில் கூட கட்டாயம் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
கார்த்திகை மாதம் என்றாலே கார்த்திக்கேயன் என்ற பெயர் கொண்ட தமிழ்க் கடவுளான முருகனை அனைவரும் நினைத்துப் பார்ப்போம். ஆம் முருகன் குழந்தையாக அவதரித்த மாதம் கார்த்திகை மாதம் என்பதால், முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் அரங்கேறும். 16 ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வதற்கு ஏற்றார் போல் மன முவந்து முருகனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கப்பெறுவீர்கள். ஒருவேளை அறுபடை வீடுகளுக்குச் செல்ல முடியாத நபர்கள் வீட்டிலேயே முருகனின் திருவுருப்படத்திற்கு அனைத்துப் பூஜைகள் செய்து வழிபடவும். இதுபோன்ற பூஜை மற்றும் வழிபாட்டு முறைகளில் ஈடுபடும் ஆன்மீக வாதிகளில் நீங்களும் ஒருவரா? கார்த்திகை மாதத்தில் கடற்கரையில் அருள்பாலித்திருக்கு செந்திலாண்டவரைத் தரிசனம் செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா? அப்படியென்றால் எப்படி முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்குச் சென்றால் அனைத்து அருளும் நல்ல முறையில் கிடைக்க எப்படியெல்லாம் முருகனை வழிபட வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே தலமாக உள்ளது செந்திலாண்டவர் என்ற பெயரில் குடியிருக்கும் முருகப்பெருமான். அவர் நினைத்தால் மட்டுமே அதாவது அனுமதித்தால் மட்டுமே திருச்செந்தூர் செல்ல முடியும். அனைத்துத் தடைகளையும் தாண்டி ஒருவழியாக கோவிலுக்குச் செல்கிறீர்கள் என்றால், வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன் ஒரு தீபம் ஏற்றி முதலில் குல தெய்வத்தை வணங்க வேண்டும். பிறிவி பிணியைப் போக்கி தலையெழுத்தை மாற்றக் கூடிய வலிமைக் கொண்டவர் என்றும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை செய்யும் மூம்மூர்த்திகளின் வடிவமாக திருச்செந்தூரில் மட்டுமே முருகன் அருள்பாலிக்கிறார் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வாழ்க்கையில் நினைத்த காரியம் நிறைவேற விரும்பினால் இந்த முருகன் மந்திரங்களை சொல்லுங்கள்
நீங்கள் திருச்செந்தூரை அடைந்த பின்னதாக முதலில் கடலில் குளிக்க வேண்டும். இதன் பின்னதாக நாழிக்கிணறில் நீராட வேண்டும். நாழிக்கிணறில் குளித்த பின்னதாக வேறு எங்கும் குளிக்கக்கூடாது. இதையடுத்து ஈரத்துணியை மாற்றிக் கொள்ளவும். ஈரத்துணியை மாற்றாமல் கோயிலுக்குச் செல்லக்கூடாது.
கோவிலுக்குள் சென்ற பின்னதாக மூலவரான சுப்பிரமணியர் சுவாமி கிழக்கு நோக்கியும், சண்முகம் என்ற பெயரோடு உள்ள முருகன் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார். அவர்களை வழிபடுவது நல்லது. இறுதியாக கொடிமர விநாயகரை வழிபட்டு வழிபாட்டுதலை மேற்கொண்டு நிறைவு செய்யவும். கோவிலின் கொடிமரத்தின் அருகில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து வழிபட வேண்டும். என்ன வேண்டுதல் உள்ளதோ? அதை நினைத்து வழிபடும் போது நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை நாணயத்தை வைத்து வழிபட்டவுடன் நினைத்த காரியங்கள் நிறைவேறினால் உங்களால் முடிந்த நேர்த்திக்கடனை செய்யவும்.
மேலும் படிக்க: "குகைக்குள் அற்புதம்" வள்ளிமலை முருகன் கோயிலின் வரலாறும் சிறப்புகளும்
முருகனுக்கு கொஞ்சமாவது பூக்கள் வாங்கி வரவும். கோவில் பிரகாரத்தில் குறைந்தது 8 அல்லது 12 மணி நேரம் வரையாவது, கோவிலில் இருக்க வேண்டும். திருச்செந்தூரில் அதிக சிறப்பு வாய்ந்தது துலாபாரம் மற்றும் குழந்தைகளைத் தத்துக் கொடுக்கும் நடைமுறைகள். பல நாட்களாக உடல் நல பிரச்சனையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வேண்டுதல் வைத்து முருகனை மனமுருகி வழிபாட்டால் குழந்தை தெய்வமான முருகன் காத்தருள்வார் என்ற நம்பிக்கை ஆன்மீக வாதிகளிடம் அதிகளில் உள்ளது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]