தமிழ் ஆண்டின் 12வது மாதமான பங்குனியில் 12வது நட்சத்திரமாகிய உத்திரத்துடன் பெளர்ணமி இணைந்து வருவது பங்குனி உத்திர திருவிழாவாகும். பங்குனி உத்திர நாளில் முருகன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டு காணப்படும். இந்த நாளில் முருகன் வழிபாடு மிகவும் சிறப்புக்கு உரியது. இந்த ஆண்டு பங்குனி மாத பெளர்ணமி 12ஆம் தேதி வந்தாலும் பங்குனி உத்திரம் 11ஆம் தேதியே கொண்டாடப்படுகிறது. முருகனின் கோயில்களில் கொடியேற்றப்பட்டு இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படும். அன்று சுபமுகூர்த்த தினமும் கூட. பங்குனி உத்திர விழாவிற்காக ஏற்கெனவே பழநி முருகன் கோயிலில் கடந்த சனிக்கிழமை கொடியேற்றப்பட்டது.
பங்குனி உத்திர திருவிழா 2025
பங்குனி உத்திரத்தில் சிவபெருமான் - பார்வதி தேவி, முருகன் - தெய்வானையை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே கோயில்களில் திருமண வைபவம் நடைபெறுகிறது. குறிப்பாக முருகனுக்கு பால் குடம் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்யக்கூடிய நாள் பங்குனி உத்திரம். முருகனின் அகம் எப்போதுமே அழகாக இருக்கும் என்பார்கள். ஏனென்றால் முருகன் பக்தருக்கு மட்டுமல்ல பகைவனுக்கும் கருணை காட்டுபவன் என்பதால் முருகனின் அழகான முகம் மிளிர்ந்து கொண்டே இருக்கும்.
உத்திர நட்சத்திரம்
10-04-2025 மதியம் 2:07 மணிக்கு ஆரம்பித்து 11-0-2025 மாலை 4.11 மணி வரை தொடரும். பெளர்ணமி 12ஆம் தேதி வருகிறது.
பங்குனி உத்திர வழிபாடு நேரம்
காலை 9 மணி முதல் 10.20 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை
பங்குனி உத்திர விரதம்
திருமணத்திற்காக வேண்டி விரதம் இருப்பவர்கள் காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் இருக்கவும். காலையிலும் மாலையிலும் நெய் தீபங்கள் ஏற்றி திருப்புகழ் படிக்கவும்.
வாழ்க்கை சிறக்க வேண்டிக் கொண்டு முருகனிடம் விரதம் இருப்பவர்கள் பால் குடம் எடுக்கும் வரையில் விரதம் கடைபிடித்தால் போதும். வீட்டில் முருகனுக்கு நெய் வேத்தியமாக சர்க்கரை பொங்கலும், தேனும் தினை மாவும் படைப்பார்கள்.
மேலும் படிங்கஸ்ரீ ராம நவமி வழிபாடு : ராம நாமம் சொல்ல வேண்டிய முக்கிய நேரம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation