மனிதனை போல் மானுட அவதாரம் எடுத்து வாழ்க்கையில் மனிதன் எதிர்கொள்ளக்கூடிய துன்பங்கள் எதிர்கொண்டு இன்னல்களை சந்தித்து அதையும் அவற்றில் இருந்து எப்படி நிவர்த்தி பெறலாம் என்பதை வாழ்க்கை தத்துவமாக விளக்கி காட்டியதன் காரணமாகவே ராம அவதார நாளான ராம நவமியை வடமாநிலத்தவர் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். விஷ்ணு பகவானின் 7வது அவதாரமான ராமர் தசரத சக்ரவர்த்திக்கு மகனாக பிறந்தார். இவ்வருடம் ராம நவமி ஏப்ரல் 6ஆம் தேதி அமைந்திருக்கிறது. இந்த நாளில் அயோத்தியில் கொண்டாட்டங்கள் களைகட்டும். ராம நவமி நாளில் ராம பக்தர்கள் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ராம நவமி வழிபாடு 2025
சேலுண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப் பள்ளிவளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்றுமேதி கனறு உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலும் பச்சை தேரை தாலாட்டும் பண்ணை
கம்பர் எழுதிய இவ்வரிகளுக்கும் ராமருக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். முதல் வரி அயோத்தியில் தண்ணீர் சுமந்து செல்லும் பெண்களை குறிக்கிறது. இதில் எருமை தன் கன்றுக்கு பால் சுரக்கும் என எதிர்பார்த்தால் பால் கன்றுக்கும், எருமை உரியவனுக்கும் கிடைக்காமல் அன்னக்குஞ்சுகளுக்கு கிடைக்கிறது. அதாவது தசரத சக்ரவர்த்தி மணிமகுடம் என்ற பாலை தன் மகனுக்கு கொடுக்க நினைத்தாலும் அதை பரதன் கரந்து சென்று இறுதியாக ராமரின் திருவடியில் இருந்த பாதுகைக்கே சென்றது.
தசரத மன்னன் பல ஆண்டுகள் தவமிருந்து ராமரை பெற்றார். அதே போல குழந்தை பாக்கியம் வேண்டும் நபர்கள் ராம நவமி நாளில் விரதமிருந்து ராமரை வழிபட்டால் அவருடைய ஆசி பெற்று குழந்தையை பெற்றெடுக்கலாம்.
ராம நவமி நேரம்
6.04.2025 அன்று சரியாக 1.08 மணிக்கு ராம நவமி ஆரம்பித்து 7.04.2025 12.25 வரை ராம நவமி தொடர்கிறது. அதே நாளில் புனர்பூச நட்சத்திரம் 5.05.2025 காலை 10.48 மணி முதல் 6.04.2025 காலை 10.31 மணி வரை தொடர்கிறது. ராமர் புனர்பூசம் நட்சத்திரம் நவமி திதியில் அவதரித்தார். எனவே காலை 6 மணிக்கு மேல் காலை 10.20 மணிக்குள் ராமரை வழிபடுவது சிறப்பு.
காலை முதல் மாலை உபவாசம் இருக்கவும். குழந்தை பாக்கியத்திற்காக கணவன் மனைவி இருவரும் உபவாசம் இருங்கள்.
மேலும் படிங்கஉலக நன்மைகாக சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம்; பக்தர்கள் வழிபடும் முறை
ராம நவமி சிறப்பு வழிபாடு
ராமரின் படத்திற்கு, சிலைக்கு துளசி மாலை அணிவித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதி துளசி தீர்த்தம், பானகம் ஆகியவற்றை நெய் வேத்தியமாக படைக்கவும். ராம நாமத்தை தொடர்ந்து உச்சரிக்கவும். இதனால் உங்களுக்கு பல பலன்கள் கிடைக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation