எல்லோருக்கும் தாயாக விளங்கி உலக மக்களை காத்து நாம் கேட்கும் வரங்களை எல்லாம் கொடுக்கும் சக்தி நிறைந்த தெய்வமாக நம் கண்களின் முன்னே அருள்பாலிக்கும் அன்னை சமயபுரத்து மாரியம்மன் திருச்சி மாவட்டத்தில் வீற்றிருக்கிறாள். வீட்டில் இருக்கும் தாய் போல சமயபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மாரி ஆத்தா என அன்புடன் அழைக்கும் அம்மன் சமயபுரத்து மாரியம்மன். நமக்கு உடல் நிலை பாதிப்பு, நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் அதிலிருந்து மீள்வதற்கு பெற்ற தாய் எந்த சாமிக்கும் விரதமிருந்து வழிபடுவது வழக்கம். அந்த வழக்கத்தை மாற்றியவள் சமயபுரத்து மாரியம்மன். உலக மக்களின் நன்மைக்காக விரதம் இருப்பவள் சமயபுரத்து மாரியம்மன். கடவுள் விரதம் இருக்கும் அதிசயம் சமயபுரத்து மாரியம்மனுக்கே உரித்தானது.
சமயபுரத்து மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்
உலக நன்மைக்காக 28 நாட்கள் சமயபுரத்து மாரியம்மன் விரதம் இருப்பதை பச்சைப் பட்டினி விரத காலம் என்றழைக்கின்றனர். பொதுவாக அம்மனுக்கு தினந்தோறும் நெய் வேத்தியம் படைக்கப்படும். ஆனல இந்த 28 நாள் விரத காலத்தில் அம்மனுக்கு வழக்கமான நெய் வேத்தியம் கிடையாது. கரும்பு, இளநீர், துள்ளு மாவு, பழங்களுடன் அம்மனுக்கு நெய் வேத்தியம் செய்யப்படும். நம்முடைய நலனுக்காக அம்மனிடம் குறைகளை சொல்லி விமோட்சனம் கேட்கிறோம். நமக்கு நல்லது நடக்க பரமசிவனிடம் வேண்டிக் கொண்டு சமயபுரத்து அம்மன் தவம் இருக்கிறாள்.
பச்சை பட்டினி விரத காலம்
மாசி மாதத்தின் கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிறு வரை பச்சை பட்டினி 28 நாள் விரத காலம் ஆகும். சமயபுர மாரியம்மன் கோவிலில் இந்த ஞாயிற்றுக்கிழைகளில் பூச்சொரிதல் விழா நடைபெறும்.
பூச்சொரிதல் விழா நாட்கள்
- மார்ச் 9
- மார்ச் 16
- மார்ச் 23
- மார்ச் 30
- ஏப்ரல் 6
பச்சை பட்டினி விரதம் இருக்கும் அம்மனை குளிர்விப்பதற்காக பக்தர்கள் மலர்கள் கொண்டு வந்து கோயிலில் சமர்ப்பிப்பார்கள். பூச்சொரிதல் நாட்களில் குங்கும நிற மேனியில் காட்சியளிக்கும் அம்மனை தரிசித்து பலன்களை பெறவும்.
சமயபுரத்து மாரியம்மன் வழிபாடு
28 நாட்களும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். பூச்சொரிதல் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை விரதம் கடைபிடிக்கலாம். வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் மூன்று நாட்களுக்கு விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமை அன்று அம்மனுக்கு விசேஷம் இருப்பது சிறப்பானது.
செவ்வரளி மலர்களால் அம்மனுக்கு அர்ச்சனை செய்து நினைத்த வேண்டுதல் நிறைவேறிட மஞ்சள் துணியில் 101 ரூபாய் முடிச்சு கட்டி விரதம் கடைபிடித்து இந்த 28 நாள் விரத காலத்தில் அம்மனை வழிபடவும்.
மேலும் படிங்க"அய்யா வைகுண்டர்" கலியை அழிக்க சமதர்ம சமூக அமைப்பு பாதைக்கான வித்து
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation