மார்ச் 4ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினமாகும். இந்த ஆண்டு 193வது அய்யா வைகுண்டர் அவதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. சாதிக் கொடுமைகள் தலைவிரித்து ஆடிய காலத்தில் சமூக ஒற்றுமைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் இந்தியாவில் முதல் முறையாக சமபந்தி நடத்தியவர் அய்யா வைகுண்டர். 1809ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளத்தில் பிறந்தவர் அய்யா வைக்குண்டர். ஒடுக்கப்பட்ட சாதியாக கருதப்பட்ட ஒரு இனத்தில் பிறந்த குழந்தைக்கு முடிசூடும் பெருமாள் என பெற்றோர் பெயரிட்டனர். அப்போது அந்த பகுதியை ஆட்சி செய்த திருவாங்கூர் மன்னனிடம் மேல் சாதியினரின் தூண்டுதல் காரணமாக முடிசூடும் பெருமாளின் பெயர் முத்துக்குட்டி என மாற்றப்பட்டது.
அய்யா வைகுண்டரும் இறை வழிபாடும்
இறை வழிபாட்டில் ஆர்வம் கொண்ட முத்துக்குட்டி விஷ்ணுவின் தீவிர பக்தன் ஆவான். தன்னுடைய வீட்டில் விஷ்ணு பீடம் அமைத்து வழிபாடு நடத்தினான். 17 வயதில் முத்துக்குட்டிக்கு திருமாலம்மாள் என்ற பெண்ணுடன் திருணம் நடைபெற்றது. முந்தைய ஜென்மத்தில் சம்பூர்ண தேவனான முத்துக்குட்டி பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வந்தான். 22 வயதில் முத்துக்குட்டி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட இரண்டு வருடங்களாக படுத்த படுக்கையாக கிடக்கின்றான். திடீரென முத்துக்குட்டியின் தாயார் கனவில் திருமால் தோன்றி திருச்செந்தூரில் மாசி மாதம் நடக்கும் விழாவிற்கு அழைத்துச் வந்தால் முத்துக்குட்டி குணமாகிவிடுவான் என உறுதியளிக்கிறார். டோலி கட்டி முத்துக்குட்டியை திருச்செந்தூர் கடலுக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு முத்துக்குட்டி தானாக எழுந்து கடலுக்குள் நடந்து செல்கின்றான். நீண்ட நேரம் காத்திருந்தும் முத்துக்குட்டி திரும்பவில்லை.
கலியை அழிக்க பிறந்த வைகுண்டர்
கொல்லம் ஆண்டு (மலையாள நாட்காட்டி) 1008 மாசி 20ல் திருமாலுக்கும் மகாலட்சுமிக்கும் மகனாக பிறக்கிறார் அய்யா வைகுண்டர். மாய கலியை அழிக்கும் சக்தியை பெற்று கடலில் தோன்றுகிறார். தீய சக்திகளையும், வரங்களையும் பெற்ற ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட குறோணி எனும் அரக்கனை திருமால் கலி யுகத்திற்கு முந்தைய ஐந்து யுகங்களிலும் இராவணன், துரியோதனன் போன்ற அசுரர்களாக உருவெடுத்த போது ராமன், கிருஷ்ணனாக தோன்றி அழித்தார். கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது உடல் துண்டு மாயை ஆக மக்களின் மனதில் இடம்பெற்று விடுகிறது. முந்தைய யுகங்களை காட்டிலும் கலி யுகத்தில் குறோணியை அழிப்பது சிரமமாகிவிடுகிறது. இதை அகிலம் எனும் அய்யா வழி பின்பற்றும் நபர்களின் புனித நூலான அகிலத்தில் முன்னின்னு கொல்ல மூவராலும் அரிது என குறிப்பிடப்பட்டுள்ளது. கலியை அழிப்பதற்கு விஞ்சை என்ற உபதேசம் வைகுண்டருக்கு வழங்கப்படுகிறது.
அய்யா வைகுண்டரின் தவமும் சமூக சீர்திருத்தமும்
பூவண்டன் தோப்பில் அய்யா வைகுண்டர் கலியை அழிக்க ஆறு வருடங்கள் தவமிருந்தார். தலா இரண்டு வருடம் ஆறடி குழி, தரை, உயர்ந்த மேடையில் தவமிருந்தார். அய்யா வைகுண்டரின் போதனைகளை கேட்க மக்களும் அவரை பின்தொடர்ந்தனர். சாதி வேறுபாடு இன்றி ஓரே கிணற்றில் அனைவரையும் தண்ணீர் குடிக்கச் செய்தது, இந்தியாவிலேயே முதல் முறையாக சமபந்தி உணவளித்தது, வாழ வழி தெரியாமல் தவித்த மக்களுக்கு சமூக சமதர்ம பாதையை சொல்லிக் கொடுத்து மாற்றத்தை ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்டர். உருவ வழிபாடு இல்லாத பூஜை முறை, தீண்டாமை ஒழிப்புக்கு தலையை தொட்டு நாமமிடுவது, யார் வேண்டுமானாலும் தலைப்பாகை அணியலாம் என சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தார். மனதில் உள்ள கலி அழிய ஒவ்வொருவரும் தாழக்கிடப்பாதை தற்காப்பதே தர்மம் என உணர்ந்து அச்சமின்றி சுயமரியாதையுடனும் மானத்தோடும் வாழ வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation