தமிழ் புத்தாண்டு ராசிபலன் : மேஷம் டூ மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எப்படி அமையப் போகிறது ?

பிறக்கும் விசுவாவசு தமிழ் புத்தாண்டில் மூன்று கிரங்களின் மாற்றங்கள் இருக்கப் போகின்றன. விசுவாவசு தமிழ் புத்தாண்டு வெற்றிகளை வழங்கும் ஆண்டாக பார்க்கப்படுகிறது. இந்த தமிழ் புத்தாண்டு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கார்களுக்கும் எப்படி அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
image

குரோதி வருடம் பங்குனி மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கடந்து 2 மணி 22 நிமிட அளவில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டில் மூன்று கிரகங்களின் மாற்றங்கள் இருக்கின்றன. பிறக்கும் விசுவாவசு தமிழ் புத்தாண்டில் பிரச்னைகள் தீர்ந்திடுமா ? வருமானம் உயருமா ? கல்யாணம் கைகூடுமா ? போன்ற பல கவலைகள் உங்களுக்கு இருக்கும். விசுவாவசு வருடம் விவசாயத் தொழில் செய்வோருக்கு சிறப்பான ஆண்டாக நிச்சயம் அமையும். தொட்டது துலங்க நினைத்தது நிறைவேற 12 ராசிக்காரர்களுக்கும் விசுவாவசு புத்தாண்டு எப்படி அமையப் போகிறது என்பதை பார்ப்போம்.

tamil puthaandu rasipalan

தமிழ் புத்தாண்டு ராசிப்பலன்

மேஷம்

வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு ராகு பெயர்ச்சி வருகிறது. இந்த விசுவாவசு ஆண்டில் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார நிலை மேம்படும், ஆண்டின் இறுதியில் குருபெயர்ச்சிக்கு பிறகு எல்லா வழிகளிலும் வெற்றியே கிட்டும். கல்யாண கனவு நிறைவேறும், குடும்பத்தில் சிக்கல்கள் அகலும், வெளிநாட்டு பயணங்களுக்கான யோகமும் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு தொடக்கம் அற்புதமாக இருக்கும். பொருளாதார திருப்தி, தொழில் முன்னேற்றம், சுயதொழிலில் லாபம், உயர்பதவி வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை தொடரும். முன்னேற்ற பாதையிலேயே பயணிப்பீர்கள்.

மிதுனம்

குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது படுவதால் தாய் வழி ஆதரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள், பதவி மற்றும் ஊதியத்தில் உயர்வு உண்டு, குடும்ப உறவுகளில் மேம்பாடு, கல்யாண வாய்ப்பு கைகூடும். சுய தொழில் தொடங்குவதாக இருந்தால் ஒரு முறை தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபடவும்.

கடகம்

அஷ்டம சனி காரணமாக இவ்வாண்டு நீங்கள் எதிலும் பொறுமை கடைபிடிப்பது நல்லது. வீண் செலவுகள், விரயம் அதிகமாகும். முன்னேற்ற பாதையில் பயணிக்க முயற்சித்தால் இரண்டு அடி பின்நோக்கி செல்வீர்கள். வருடத்தின் பிற்பாதியில் அற்புதமான வளர்ச்சி காண்பீர்கள். ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபடுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வீடு, இடம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. அலுவலக பணியிக் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். குடும்பம் முன்னேற்ற பாதையில் பயணிக்கும்.

கன்னி

இந்த ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும், நினைத்தது நடக்கும், செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும், படிப்படியான தொழில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சர்ப்ப தோஷம் இருந்தால் பரிகாரம் செய்யவும்.

துலாம்

விசுவாவசு வருடம் உங்கள் ராசியில் தான் பிறக்கிறது. எந்த காரியத்தை செய்ய நினைத்தலும் அதை தாராளமாக தொடரலாம். ஆரோக்கிய பிரச்னைகள் அகலும். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். பதவி மாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வெற்றிக்கனியை எட்டி பிடிக்கும் ஆண்டாகும். தேர்ந்தெடுக்கும் களத்தில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். கைகளில் பணம் புரளும், புகழ் உயரும், கல்யாண கனவு நினைவாகும், தொழில் சிறக்கும், ஆரோக்கிய தொல்லைகள் அகலும்.

தனுஷ் ராசி

தமிழ் வருடத்தின் இறுதியில் தனுஷ் ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வீண் பழிக்கு ஆளாகாதீர்கள், உறவினர்களிடம் பகையை வளர்க்காதீர்கள், வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. எனினும் உங்களுக்கு சுபகாரியங்கள் நடக்கும், வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். இந்த வருடம் எந்த செயலிலும் பொறுமை காக்கவும்.

மகரம்

இந்த ஆண்டு முழுவதும் மிகுந்த நன்மைகள் நடக்கப் போகின்றன. அக்டோபர் மாதத்திற்கு பிறகு அற்புதங்கள் நிகழும். பொருளாதார திருப்தி அடைவீர்கள். வீடு வாங்கும் கனவு படிப்படியாக நிறைவேறும்.

கும்பம்

அனைத்து கிரங்களின் பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மையையே வழங்கும். கடந்த அஆண்டில் நிறைவேறாத காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கை தேவை அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு பெற்றோர் வழியில் உதவி உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு பெரிய வட்டத்தில் நட்புறவு ஏற்படும், தொழில் முன்னேற்றம் காண்பீர்கள், பதவி உயர்வு உண்டு, குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், புதிய சொத்துகள் வாங்குவீர்காள். ஜென்ம சனி பற்றி கவலைப்படாதீர்கள்.

மேலும் படிங்கதிருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் அவசியமா ? ரஜ்ஜு பொருத்தம் முக்கியமா ?

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP