மதுரை மாநகருக்கு கோவில் நகரம், தூங்கா நகரம், கூடல் நகரம் என பல்வேறு பாரம்பரிய பெயர்கள் உள்ளது. தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமான மதுரையின் மிகப்பெரிய அடையாளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலாகும். அதிலும் தென்மாவட்டங்களில் திருவிழா என்றாலே மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிகழ்வில் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்த சித்திரை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றால் மதுரை மாவட்டம் முழுவதும் கொடியேற்றம் நடந்ததாக மதுரை மக்கள் கருதுவார்கள். கொடியேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மதுரை மாவட்டம் முழுவதும் விழா கோலம் பூண்டு வெகு விமர்சையாக காட்சியளிக்கும்.
மேலும் படிக்க:ஏப்ரல் 2025: முக்கிய விசேஷ நாட்கள், விரதங்கள், சுபமுகூர்த்தம், அரசு விடுமுறை மற்றும் வாஸ்து நாட்கள் முழு விவரம்
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். குறிப்பாக மாசி திருவிழா, ஐப்பசி திருவிழா என தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு திருவிழாக்கள் விசேஷமாக வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதில் மிக முக்கியமான சிகர திருவிழாவான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 17 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு சித்திரை மாதம் 16 -ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மீனாட்சி அம்மன் கோவில் தங்க கொடி மரத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சித்திரை 23ம் நாள்- மே 6 ம் தேதி செவ்வாய் கிழமை அன்று வெகு விமர்சையாக நடைபெறும். குறிப்பாக அன்று இரவு 07.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் விருச்சக லக்கனத்தில் அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் வைத்து பட்டாபிஷேகம் நடைபெறும். அப்போது அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றி ரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் கொடுக்கப்படும். அதாவது மீனாட்சி அம்மன் மதுரை மக்கள் பக்தர்கள் புடை சூழ பட்டத்து அரசியாக முடி சூட்டிக் கொண்டு பாரம்பரிய வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்த பின்பு சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரை மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்கும். அதனைத் தொடர்ந்து அன்று இரவு பட்டத்து அரசியாக நான்கு மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன் வலம் வருவார்.
திக்கு விஜயம்
சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவான திக்கு விஜயம் சித்திரை மாதம் 24ம் நாள் மே 07 ஆம் தேதி புதன்கிழமை காலை 7:00 மணிக்கு நடைபெறும். அதனை தொடர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் அம்மன் மரவர்ணச் சப்பரத்தில் எழுந்தருள்வார். அதனை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு திருவிதி உலா நிறைவுற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திரும்புவார். மேலும் மாலை 6.00 மணி அளவில் மீனாட்சியம்மன் மீண்டும் இந்திர விமானத்தில் நான்கு மாசி வீதிகளில் வளம் வருவார்.திரு வீதி உலா நிறைவு பெற்று இரவு 11:30 மணிக்கு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து சேர்வார்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு மேற்கு ஆடி வீதியில் உள்ள பிரம்மாண்ட திருக்கல்யாண மண்டபத்தில் சித்திரை 25 ம் நாள்- மே 0 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறும்.
அப்போது அப்பன் சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிப்பார் அதனைத் தொடர்ந்து அம்மணம் சுவாமியும் திருமண கோலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இந்த நிகழ்வின் போது திருக்கல்யாணத்தை பார்க்க வந்த பின் பக்தர்கள் அனைவரும் தங்களின் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்ளும் நிகழ்வும் நடைபெறும். திருக்கல்யாணத்தை நேரில் பார்க்க வர முடியாத பக்தர்கள் அவர்களது வீட்டிலேயே அந்த மங்கள நேரத்தில் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வார்கள்.
மீனாட்சி திருத்தேரோட்டம்

சித்திரை திருவிழாவின் பதினொன்றாம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் சித்திரை 26ஆம் நாள் - மே 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள தேர்முட்டி பகுதியில் அதிகாலை 5.05 மணிமுதல் 5.29 மணிக்கு மேஷலக்னத்தில் நடைபெறும். அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு மீனாட்சி திருத்தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படும்.
கள்ளழகர் எதிர்சேவை

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்பு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறும். குறிப்பாக சித்திரை மாதம் 28ஆம் தேதி மே 11 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி ,மே 29ஆம் தேதி காலை வரை நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக ஒன்று சேர்ந்து கள்ளழகரை வரவேற்பார்கள்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்

சித்திரைத் திருவிழாவின் இறுதி நாளான மே 12ஆம் தேதி சித்திரை திருவிழாவின் உச்சநிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு காலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடமிட்டு கோவிந்தா கோஷம் முழங்க சுந்தர்ராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெறும். இந்த நிகழ்வின்போது மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் ஒன்று கூடி கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகரை வணங்கி செல்வார்கள்.
மேலும் படிக்க:வீட்டில் பூஜை செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள மேலும், இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் - HerZindagi Tamil
image source: Meenakshi temple
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation