வீட்டில் பூஜை செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் மட்டுமே வீட்டில் உள்ள பூஜை சமான்களை சுத்தம் செய்ய வேண்டும்.

pooja room rituals

ஒவ்வொரு வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கவும், தெய்வீக மனம் கமழவும், லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் பூஜை அறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக தினமும் வழிபாடுகள் மேற்கொள்வதற்கு முன்னதாக பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடிய விளக்குகள், சுவாமி படங்கள் போன்றவற்றை வாரத்திற்கு இருமுறை அல்லது முடிந்தால் தினமும் கூட லேசாக துடைத்தெடுத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எப்போது ஒவ்வொரு வீட்டிலும் சுத்தம் நிறைந்தாக இருக்கிறதோ? அந்த வீடுகளில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை ஆற்றல் மட்டுமே எப்போதும் நிலவக்கூடும். இதோடு மட்டுமின்றி வீட்டில் பூஜை செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சில தகவல்கள் இங்கே.

வீடுகளில் பூஜை வழிபாட்டு முறைகள்:

  • உங்களது வீட்டு பூஜை அறைகளில் எப்போதும் காய்ந்த பூக்களை வைத்திருக்கக்கூடாது. அதே போன்று வழிபாட்டிற்காக வைத்து வழிபடும் எலுமிச்சை பழங்கள் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். அப்போது தான் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி எப்போதுமே நேர்மறை எண்ணங்கள் மட்டுமே பூஜை அறையில் நிலவக்கூடும்.
  • பூஜை அறைகளில் வைக்கக்கூடிய விளக்கு,பத்தி ஸ்டான்ட், கற்பூரம் வைக்கும் தட்டுகள் போன்றவற்றை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் சுத்தம் செய்யும் போது அந்த நாட்கள் திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் மட்டுமே இருக்க வேண்டும். உங்களது வீடுகளில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • வீடுகளில் பூஜை செய்யும் போது கட்டாயம் நெய் வைத்தியம் வைத்தும், ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்தும் வழிபட வேண்டும்.
  • சாமி கும்பிடுவதற்கு முன்னதாக விளக்கிற்கு மலர்களை வைத்த பின்னதாக விளக்கேற்ற வேண்டும். விளக்கில் இருக்கும் பூக்கள் கருகாமல் பாத்துக் கொள்வது நல்லது.
  • இதையடுத்து சாம்பிராணி அதாவது தூபம் ஏற்றி வழிபட வேண்டும். இது வீட்டிற்குள் தேங்கியிருக்கும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றுவதற்கு உதவியாக இருக்கும். சாம்பிராணியில் சில மலர்கள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் வாசனைகள் உள்ளதால் அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்யவும். இந்த வாசனைகள் மனதிற்கு அமைதியையும், நேர்மறை எண்ணங்களையும் அதிகரிக்கும்.
  • வீடுகளில் சாமி கும்பிடும் போது சில மந்திரங்களை உச்சரிப்பது நல்லது. இது உங்கள் மனதில் உள்ள கவலைகளை நீக்கி அமைதியைக் கொடுக்கும். மேலும் காயத்ரி மந்திரம், மாரியம்மன் தாலாட்டு, அபிராமி அந்தாதி, மற்றும் ஓம் மந்திரங்களை உச்சரித்து வழிபாடுகள் நடத்த வேண்டும். இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்தி தினமும் வழிபாடுகள் மேற்கொண்டாலே மனதில் உள்ள கவலைகள் நீங்கி எப்போதும் மன நிம்மதியுடன் வாழ்வீர்கள்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP