சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க

நம்முடைய சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த சிம்பிளான ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை பயன்படுத்தலாம். இதனை தயாரிக்கும் முறை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
image

இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட ஃபேஸ்பேக்கிற்கு மாற்றாக இயற்கையான ஃபேஸ்பேக் தேடுபவர்களுக்கு ஏற்ற வகையில், ஆயுர்வேத ஃபேஸ்பேக் தயார் செய்யும் முறையை இந்தக் கட்டுரையில் காணலாம்.

அழகின் மீது இன்றைய சூழலில் பலருக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த இடத்தில் அழகு என்பதை நிறத்துடன் ஒப்பிடக் கூடாது. எப்போதும் நம்மை பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதே அழகின் ரகசியம் ஆகும். இதற்காக இளம் தலைமுறையினர் மட்டுமின்றி நடுத்தர வயதினர், முதியவர்கள் கூட மெனக்கெடுகின்றனர்.

ஆயுர்வேத ஃபேஸ்பேக்:

இதற்காக, ஃபேஸ் கிரீம், சீரம், ஃபேஸ்மாஸ்க் போன்ற சாதனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. எனினும், இவற்றில் இரசாயனங்கள் சேர்ந்திருக்கும் காரணத்தால் பக்க விளைவுகள் அல்லது ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகளும் இருக்கிறது. ஏனெனில், ஒவ்வொரு நபரின் சரும அமைப்பும் வேறுபடும்.

இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் அல்லது ஆயுர்வேத அடிப்படையில் ஃபேஸ்பேக் உபயோகப்படுத்தலாமா என்று பலரும் யோசிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்ற வகையில் சிம்பிளான ஆயுர்வேத ஃபேஸ்பேக் எப்படி தயாரிக்கலாம் என்று தற்போது பார்க்கலாம். இது நம் சருமத்தை பொலிவாக வைத்திருப்பதுடன், நம்மை இளமையாக உணரச் செய்யும்.

Simple face pack

தேவையான பொருட்கள்:

பால்,

நவர அரிசி பொடி,

லாக்‌ஷா பொடி,

மஞ்சிஸ்தா பொடி, க

ஸ்தூரி மஞ்சள் பொடி,

குங்குமப்பூ.

மேலும் படிக்க: வெயிலின் தாக்கத்தால் முகம் கருமையாகி விட்டதா? கவலையே வேண்டாம்... இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க!

ஃபேஸ்பேக் தயாரிக்கும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து நம் முகத்திற்கு தேவையான அளவு பசும்பால் ஊற்றி, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து காய்க்க வேண்டும். இதனிடையே, நவர அரிசி பொடியை இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் இரண்டு ஸ்பூன் லாக்‌ஷா பொடி, மஞ்சிஸ்தா பொடி, சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Ayurved Facepack

இவை அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளை துணியில் பொட்டலம் போன்ற கட்டி எடுத்துக் கொள்ளலாம். இதனை, அடுப்பில் இருக்கும் பாலில் அப்படியே வைத்து வேகவைக்க வேண்டும். குறிப்பாக, பால் கெட்டியாகும் வரை வேகவைக்க வேண்டும். இந்தப் பாலுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்.

பால் நன்கு கெட்டியாக வற்றியதும் அடுப்பை அணைத்து விடலாம். இதற்கடுத்து, பொட்டலத்தின் சூடு தணிந்ததும் அதனை பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் கிரீம் பதத்திற்கு நமக்கான ஆயுர்வேத ஃபேஸ்பேக் தயாராகி விடும். இது பார்ப்பதற்கு சற்று பிங்க் நிறத்தில் இருக்கும்.

இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவி விட்டு சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நம்முடைய முகம் பார்ப்பதற்கு பொலிவாகவும், இளமையாகவும் இருக்கும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP