
குளிர்காலம் தொடங்கியதில் இருந்து சருமம் வறண்டு போவது, பொலிவிழப்பது போன்ற பிரச்சனைகள் சாதாரணமாகிவிடுகின்றன. குளிர்ந்த காற்று சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை உறிந்து விடுவது இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த நேரத்தில் விலை உயர்ந்த இரசாயனம் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, நம் சமையலறையில் இருக்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது சிறந்த தீர்வாகும். ஏனெனில், இவற்றில் இருந்து ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
அந்த வகையில், சரும பராமரிப்பில் தேன் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து சருமத்திற்குள் தக்கவைக்க உதவுகிறது. குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கவும், மென்மையாக வைத்திருக்கவும் உதவும் 5 வகையான தேன் ஃபேஸ் பேக்குகளை எப்படித் தயாரிப்பது என்பதை இதில் விரிவாக காண்போம்.
வாழைப்பழம் சரும துளைகளை இறுக்கமாக்கவும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. தேனும், வாழைப்பழமும் சேரும் போது சருமம் மென்மையாவதோடு, முகத்திற்கு ஒரு உடனடி பொலிவு கிடைக்கிறது.
மேலும் படிக்க: Winter Skin Care: குளிர்காலத்தில் உங்கள் முகத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் டாப் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்
கடலை மாவு, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், சரும செல்களுக்கு ஆழமான ஊட்டச்சத்தை அளிக்கவும் உதவுகிறது. இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.

பப்பாளியில் இயற்கையாகவே எக்ஸ்ஃபோலியேட்டிங் (Exfoliating) பண்புகள் உள்ளன. இது இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாக்கும். தேனுடன் சேரும் போது இது சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை அளிக்கிறது.
மேலும் படிக்க: Oily Skin Face Pack: குளிர்காலத்தில் அதிக எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ் பேக்கை பயன்படுத்தவும்
முட்டை சருமத்திற்கு அதிகப்படியான ஈரப்பதத்தை அளிக்கும் ஒரு பொருள். முட்டையின் மஞ்சள் கரு, சரும துளைகளை இறுக்கமாக்க உதவும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

ஓட்ஸ் ஒரு சிறந்த ஸ்க்ரப் (Scrub) ஆக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி, உள்ளிருந்து ஒரு பளபளப்பை கொண்டு வருகிறது.
பன்னீர் - சில துளிகள்
ஓட்ஸ் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
இந்த குளிர்காலத்தில், கடைகளில் கிடைக்கும் இரசாயன பொருட்களை தவிர்த்து, இது போன்ற இயற்கையான தேன் ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தால், உங்கள் சருமம் வறட்சியின்றி பளபளப்பாக காணப்படும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]