
Skin Care Routine: குளிர்காலம் தொடங்கியதில் இருந்து சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். பொதுவாக, பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகும் என்று நமக்கு தெரியும். ஆனால், அதிக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த காலம் சற்று சவாலானது. குளிர்கால காற்று சருமத்தை வறட்சியடைய செய்யும் அதே வேளையில், சருமம் தன்னை பாதுகாத்துக் கொள்ள அதிகப்படியான எண்ணெய்யை சுரக்க தொடங்கும்.
இதனால் முகம் ஒருவித மங்கலான தோற்றத்துடனும், பிசுபிசுப்புடனும் காணப்படும். இந்த சூழலில் இரசாயனங்கள் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, இயற்கையான ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதே சிறந்த தீர்வாகும். இது சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவதோடு, முகத்தை பொலிவாகவும் மாற்றும். குளிர்காலத்தில் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள் குறித்து இதில் காண்போம்.
பாரம்பரியமாக, நமது அழகுக் குறிப்புகளில் தவறாமல் இடம்பெறும் இரண்டு பொருட்களாக இவை விளங்குகின்றன. கடலை மாவு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை உறிந்து கொள்ளும் தன்மை கொண்டது.
இது சருமத்தில் உள்ள சீபம் (Sebum) எனப்படும் எண்ணெய் சுரப்பை சமநிலைப்படுத்துகிறது. பால், சருமத்திற்கு மென்மையை அளிக்கும் அதே வேளையில், மஞ்சள் கிருமிகளை தடுத்து முகத்தை ஜொலிக்க வைக்கும்.
மேலும் படிக்க: Winter Face Pack: குளிர்காலத்தில் மங்கிப் போன சருமத்தை பொலிவாக மாற்ற உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்
கற்றாழை அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்ற ஒரு அற்புதமான மூலிகை ஆகும். இது குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளும்.

கற்றாழை ஜெல்
மஞ்சள் தூள்
இது எண்ணெய் பசை சருமத்திற்கு மிக சிறந்த ஃபேஸ் பேக் ஆகும். கற்றாழை சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது. இந்த எளிய முறையை தொடர்ந்து செய்தால், சில நாட்களிலேயே முகம் பளபளப்பாக மாறுவதை உணரலாம்.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முல்தானி மட்டி ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். இது சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க பெரிதும் உதவுகிறது.
முல்தானி மட்டி அதிகப்படியான எண்ணெய்யை உறிந்து விடும். பன்னீர், சருமத்திற்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும். முகப்பரு வராமல் தடுக்க இது சிறந்த வழியாகும்.
மேலும் படிக்க: Curd for Glowing Skin: சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும் 5 தயிர் ஃபேஸ்பேக்; வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சரும துளைகளை சுத்தம் செய்து முகத்தை பிரகாசமாக்கும்.

சந்தனம் சருமத்தில் ஏற்படும் தழும்புகளை மறைக்க உதவும். ஆரஞ்சு சாறு, சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி-யை அளித்து, முகத்தை உடனடியாக பொலிவாக்கும்.
மங்கலான சருமத்தை பொலிவாக்க இந்த ஃபேஸ் பேக் மிகவும் உதவும். கேரட்டில் உள்ள சத்துகள் சருமத்தை பளபளப்பாக்கும். மேலும், இது ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.
கேரட் விழுது - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் (Beta carotene) இறந்த செல்களை நீக்க உதவுகிறது. தேன், சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து மென்மையாக மாற்றும்.
இந்தக் குளிர்காலத்தில் உங்கள் சரும பராமரிப்பு முறைகளில் இது போன்ற மாற்றங்களை செய்து பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் முகம் பொலிவாக மாறும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]