தெலுங்கு பேசும் கோலாகலமாக கொண்டாடும் உகாதி பண்டிகை எனும் தெலுங்கு வருடப்பிறப்பு இந்தாண்டு மார்ச் 30ஆம் தேதி அமைந்திருக்கிறது. பண்டிகைகளின் போது வீட்டின் முன்பாக கோலமிடுவதை வேறு என்ன முக்கிய வேலை நமக்கு இருக்கப் போகிறது. இந்த உகாதி பண்டிகைக்கு வீட்டு வாசலில் போடுவதற்கான சில எளிய கோலங்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன.
தெலுங்கு வருடப்பிறப்பு கோலங்கள்
5*3 உகாதி கோலம்
- இது ஒரு 5*3 புள்ளி உகாதி பண்டிகை கோலம், அதாவது 5 வரிசை மற்றும் 3 நெடுவரிசையில் புள்ளிகள் வைத்து போடப்படும் எளிய உகாதி பண்டிகை மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பு கோலம்.
- 3வது நெடுவரிசையில் தொடங்கி அடுத்தடுத்த புள்ளிகளை அரை வட்டத்தில் இணைத்து பூ அமைப்பினை வரையவும்.
- அரை வட்டங்களின் வெளியே இலை இணைந்திருப்பது போல் வரையுங்கள். இப்போது உள்ளே 7 புள்ளிகள் மட்டுமே விடுபட்டு இருக்கும்.
- வரைந்த இலைகளில் பச்சை நிறத்தால் நிரப்பவும். அடர் பச்சை, வெளிர் பச்சை நிறங்களால் இலைகளை நிறமிடவும்.
- இலைகளுக்கு இடையே நெற்கதிர் தொங்குவது போல் வரைந்திடுங்கள்.
- இப்போது 2வது வரிசையில் 2 புள்ளிகளும், 3வது வரிசையில் 3 புள்ளிகளும், 4வது வரிசையில் 2 புள்ளிகளும் விடுபட்டு இருக்கும். இவற்றை இணைத்து ஒரு சிறிய பூ வரையவும்.
- பூவின் உள்ளே இளஞ்சிவப்பு நிறத்தை நிரப்பவும். நடுவே இருக்கும் புள்ளியை சுற்றி சூரியன் வரைத்து மஞ்சள் நிற பொடியினால் கோலமிடவும்.
- அடுத்ததாக அரை வட்டங்களில் உள்ளே சிறு சிறு சுருள் வரையவும். உள்ளே வரைந்த சிறிய பூவில் இலைகள் போல் இணைத்து மஞ்சள் நிறத்தால் நிரப்பவும்.
- இலைகளின் இடையே ஃ வைக்கவும். வெளியே நெர்கதிர் வரைந்த இடத்தில் மஞ்சள் நிறத்தில் பொட்டு வைத்து சிறு சிறு இதழ்கள் வரைந்து இளஞ்சிவப்பு நிறத்தால் நிரப்பினால் அழகான உகாதி கோலம் பளிச்சென தெரியும்.
- 5*3 புள்ளி கோலம் போடுவதற்கு நேரம் எடுக்கும் என நீங்கள் நினைத்தால் சிறிய அளவில் 3*2 புள்ளி கோலத்தை முயற்சிக்கலாம்.

மேலும் படிங்கபொங்கலுக்கு வீட்டு வாசலில் போட அழகான பானை கோலங்கள்; 4*6 புள்ளியில்
3*2 புள்ளி உகாதி கோலம்
- மூன்று வரிசை மற்றும் இரண்டு நெடுவரிசையில் புள்ளிகள் வைக்கவும். 2வது வரிசையில் உள்ள 3வது புள்ளியையும் 3வது வரிசையில் உள்ள இரண்டாவது புள்ளியையும் வளைவான கோடு வரைந்து இணைக்கவும்.
- இதே போல 2வது வரிசையின் முதல் புள்ளியையும் 3வது வரிசையின் முதல் புள்ளியையும் வளைவான கோடு வரைந்து இணைக்கவும்.
- முதல் வரிசையின் இரண்டு புள்ளிகளையும் வளைவான கோடு வரைந்து இணையுங்கள்.
- வளைந்த கோடுகளின் வெளியே நத்தையின் முதுகு போல் சுருள் வரையுவும்.
- நடுவே உள்ள புள்ளியை கிராஸ் செய்யவும் வகையில் முன்று கோடு வரைந்தால் மூன்று முக்கோணங்கள் கிடைக்கும்.
- நடு புள்ளியில் இருந்து மூன்று முக்கோணத்திலும் தலா இரண்டு சிறிய தீக்குச்சி வரையவும்.
- அடுத்ததாக சுருள் வடிவத்தின் தொடக்கம் மற்றும் முடிவில் இருந்து வெளிப்புறம் வழியாக பாதி ஹார்ட் வரையவும்
- நடுப்புள்ளியில் மஞ்சள், குங்குமம் வைக்கவும். சுருள் வடிவத்தின் வெளியே பட்டாம்பூச்சியின் இறக்கை வரையவும். இலைகளின் இருபுறமும் தேனியீன் கொம்பு வரையுங்கள்.
- உள்ளே உங்களுக்கு பிடித்தமான நிறங்களை நிரப்பி வெளியே உகாதி வாழ்த்து என எழுதவும்.
- இடைவெளி இடத்தில் உள்ள இடத்தில் இருந்து மூன்று கோடு போட்டு. அக்கோடுகளை இலைகளாக மாற்றவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation