herzindagi
image

Diwali 2025: தீபாவளி திருநாளில் எண்ணெய் தேய்த்துக்குளித்து வழிபட்ட உகந்த நேரம் இது தான்!

தீபாவளி திருநாளில் காலை 3 மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகளவில் உள்ளது.  
Editorial
Updated:- 2025-10-19, 21:24 IST

உலகெங்கிலும் தீபாவளி திருநாள் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கிவிட்டது. எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடைகள் அணிந்து கொண்டாடுவது வழக்கம். வழக்கமான நாள் போன்று இல்லாமல் தீபாவளி நாளில் அதிகாலையிலேயே எண்ணெய் குளிக்க வேண்டும் என்ற ஐதீகம் தொன்று தொட்டு வருகிறது. ஏன் அப்படி செய்ய வேண்டும்? எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

தீபாவளி பண்டிகையில் செய்ய வேண்டியது?

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு அக்டோபர் 20 அதாவது திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் அதிகாலை 3 மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை வீட்டில் தீபங்களை ஏற்றி வழிபாடுகள் மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க: Diwali Rangoli Designs 2025: தீபாவளியை முன்னிட்டு உங்கள் வீட்டை அலங்கரிக்கும் ரங்கோலி; கண்ணைக் கவரும் வண்ண டிசைன்கள்!

ஒருவேளை அதிகாலை 3 மணிக்கு எழுந்திருந்து குளிக்க முடியவில்லையென்றால் காலை 6 மணிக்குள் குளித்துவிட வேண்டும். பின்னர் பூஜை அறையை மலர்களால் அலங்காரம் செய்து புதிய ஆடைகளை வைத்து வழிபட்ட பின்னதாக உடுத்திக் கொள்ள வேண்டும். உங்களால் எத்தனை தீபம் ஏற்றி விளக்கேற்ற முடியுமோ? அத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட முயற்சி செய்யுங்கள். உங்களது வீட்டில் உள்ள இருள்கள் அனைத்தும் நீங்கி எப்போதும் தீப ஒளி போன்று பிரகாசமாக இருக்கும். 

மேலும் படிக்க: Happy Diwali Wishes in Tamil 2025: உங்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழக் கூடிய தீபாவளி வாழ்த்துகள் இதோ

பொதுவாக அமாவாசை நாளில் வீட்டில் உள்ள மூதாதையர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவார்கள். அதே போன்று ஐப்பசி மாதம் வரக்கூடிய அமாவாசையில் அதாவது தீபாவளி திருநாளில் வீட்டில் விளக்கேற்றி வழிபடும் போது அவர்கள் மோட்சம் அடைவார்கள்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]