herzindagi
image

மாதத்திற்கு 4 முறை கருப்பு கவுனி அரிசியை உணவில் சேர்த்து வந்தால் 70 வயதிற்கு மேலும் உடல் வலிமையாக இருக்கும்

உடல் வலிமை என்பது மிக முக்கியன், வாழ்க்கையை சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருக்க நமது உடல் வலிமையாக இருக்க வேண்டும். இதற்கு போதுமான ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
Editorial
Updated:- 2025-02-18, 22:14 IST

இன்றைய காலகட்டத்தில் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாறி வருவதால், நமது உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை, இதனால் நமது உடல் தொடர்ந்து பலவீனமடைகிறது. உடலில் பல கூறுகள் குறைபாடு இருக்கும்போது, பல நோய்கள் தாக்கி, 40 வயதில் நாம் பலவீனமாகவும் வயதானவராகவும் தோன்ற ஆரம்பிக்கிறோம். இதற்காக கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் சில உணவுகளின் உதவியுடன் ஆற்றலுடன் இருக்க முடியும், ஆனால் அவற்றைப் பற்றியும்,அதன் பண்புகள் பற்றி நமக்குத் தெரியாமல் இருக்கும். இதற்கு கருப்பு கவுனி அரிசி சரியாக இருக்கும். நீங்கள் ஒரு மாதத்திற்கு 4 முறை எடுத்துக்கொள்ளலாம், அல்லது சில மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டலாம். இதனால் 70 வயது வரை உங்களுக்கு பலவீனம் ஏற்படாது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் நோயை எதிர்க்க உதவுகிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை பார்க்கலாம்.

 

மேலும் படிக்க: எடை குறைப்பதில் தீவரம் காட்டினால் ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்துங்கள், 1 மாதத்தில் 5 கிலோ வெயிட் லாஸ் செய்யலாம்

முன்பு மன்னர்கள் மற்றும் மகாராஜாக்கள் மட்டுமே கருப்பு கவுனி அரிசிசியை உட்கொண்டிருந்தாலும், இன்று அது எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. கருப்பு கவுனி அரிசி பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. கருப்பு அரிசியில் புரதம், வைட்டமின்கள் மற்றும் பல வகையான தாதுக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த அனுமதிக்காது. இதனால் நமது உடல் பலவீனமடைவதில்லை. கருப்பு கவுனி அரிசியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றன. காபி மற்றும் தேநீரிலும் ஆக்ஸிஜனேற்றிகள் காணப்பட்டாலும், கருப்பு அரிசியில் அதன் அளவு மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக உடலை நச்சு நீக்குகிறது, இது பல வகையான நோய்கள் மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கிறது.

karuppu kavuni rice 1

 

உடல் பருமனைத் தடுக்கும்

 

கருப்பு கவுனி அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், நம் உடலை பருமனிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், இதில் உள்ள ஏராளமான நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்கி, வாய்வு அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், இதை தினமும் உட்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை.

belly fat (1)

பலவீனத்தை நீக்கும்

 

நீங்கள் பலவீனமாக உணர்ந்தால் கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளலாம். சில நாட்களில் பலவீனம் நீங்கி, அது உங்களை வலிமையாக்கும்.

 

 

நோய்களைத் தடுக்கும்

 

கருப்பு கவுனி அரிசியில் உள்ள கூறுகள் நீரிழிவு மற்றும் அல்சைமர் போன்ற நோய்களிலிருந்தும் நம்மை விடுவிக்கின்றன. கருப்பு கவுனி அரிசியில் உள்ள அந்தோசயனின் இதய நோய்களை நீக்குகிறது, மேலும் நீங்கள் ஏற்கனவே அதை உட்கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு எந்த இதயப் பிரச்சினையும் இருக்காது. இது தவிர, அந்தோசயனின் எனப்படும் நீல நிறமி இதில் காணப்படுகிறது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

 

மேலும் படிக்க: வரவிருக்கும் கடுமையான கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் கண்டறிய சில யுக்திகள்

 

நீங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் கூட கருப்பு அரிசியை சாப்பிட்டால், நீங்கள் நீண்ட நேரம் ஆற்றலுடன் இருப்பீர்கள். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]