
பெரும்பாலான வீடுகளில் அரிசி, பருப்பு, மாவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவில் பல மாதங்களுக்கு சேமித்து வைக்கப்படுவது வழக்கம். ஆனால், மழைக்காலம் அல்லது குளிர்காலம் போன்ற பருவ மாற்றங்களின் போது, இந்த தானியங்களில் சிறு சிறு பூச்சிகள் வரும்.
மேலும் படிக்க: ஆப்பிள் மீது பூசப்பட்டுள்ள மெழுகை அகற்றும் எளிய வழிமுறைகள்
இந்தப் பூச்சிகள் தானியங்களை சேதப்படுத்துவதுடன், அவற்றின் சுவை மற்றும் மணத்தையும் மாற்றி விடுகின்றன. உங்கள் அரிசியை நீண்ட நாட்களுக்கு புத்தம் புதியதாக பாதுகாக்க உதவும் சில எளிய குறிப்புகளை இதில் காணலாம்.
பூச்சிகள் ஈரப்பதமான இடங்களில் செழித்து வளரும். எனவே, அரிசியில் இருந்து பூச்சிகளை அகற்றவும், ஈரப்பதத்தை நீக்கவும் சூரிய ஒளியை விட சிறந்த வழி இல்லை. ஒரு பெரிய தட்டு அல்லது சுத்தமான துணியின் மீது அரிசியை மெல்லிய அடுக்காகப் பரப்பவும். இதை இரண்டு முதல் மூன்று மணி நேரம் நேரடி சூரிய ஒளியில் வைக்கவும். சூரியனின் வெப்பம் பூச்சிகளை விரட்டுவதுடன், அரிசியில் உள்ள ஈரப்பதத்தையும் நீக்கிவிடும். அரிசி உலர்ந்த நிலையில் இருந்தால், பூச்சிகள் மீண்டும் வருவதை தடுக்கலாம்.
ஈரப்பதம் பூச்சிகளின் வருகைக்கு ஒரு முக்கிய காரணம். ஈரப்பதத்தை உறிந்து கொள்ள உப்பு உதவுகிறது. நீங்கள் அரிசி சேமிக்கும் பாத்திரத்தின் மேற்பகுதி அல்லது அடிப்பகுதியில் சிறிது கல் உப்பை தூவி வைக்கலாம். உப்பு அதிகப்படியான ஈரப்பதத்தை உறிந்து, தானியங்களை உலர்ந்ததாகவும், பூச்சிகள் இல்லாமலும் வைக்கிறது. அரிசியை பயன்படுத்தும் போது உப்பை மட்டும் அகற்றி விடுங்கள். இது அரிசியின் சுவையை பாதிக்காது.

மேலும் படிக்க: உங்கள் வீட்டு சமையலறையில் கரப்பான் பூச்சிகள் தொல்லையா? இதை செய்தால் ஓடிவிடும்!
பிரிஞ்சி இலைக்கு பூச்சிகளை விரட்டும் இயற்கையான வாசனை உள்ளது. அரிசி பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று காய்ந்த பிரிஞ்சி இலைகளை சேர்த்து வைக்கலாம். இது, மாவு மற்றும் பருப்பு வகைகளை பாதுகாக்கவும் சிறப்பாக பயன்படுகிறது.
பூண்டின் கடுமையான வாசனை பூச்சிகளை நெருங்க விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஐந்து அல்லது ஆறு உரிக்காத பூண்டு பற்களை அரிசி சேமிக்கும் பாத்திரத்திற்குள் வைக்கவும். இதன் வாசனை குறையாமல் இருக்க, பூண்டு பற்கள் உலர்ந்து போகும் போது அவற்றை மாற்றி விடுங்கள்.

வினிகர் மற்றும் பெருங்காயத்தின் வாசனை பூச்சிகளை விரட்ட மிகவும் ஆற்றல் வாய்ந்தது. ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து, அதில் சிறிது வினிகரை ஊற்றவும். அதில் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தை சேர்க்கவும். இந்த சிறிய பாத்திரத்தை அரிசி நிரப்பப்பட்ட ஒரு பெரிய தட்டின் மையத்தில் வைக்கவும். சில மணி நேரம் கழித்து, அரிசியை ஒரு சுத்தமான, காற்று நுழையாத பாத்திரத்திற்கு மாற்றலாம்.
இது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அரிசியில் பூச்சி வருவதை நம்மால் சுலபமாக தடுக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]