
அதிகமான சத்துகள் நிறைந்த பழங்களின் பட்டியலில் ஆப்பிள் முதன்மையானது. ஆனால், சந்தைகளில் காணப்படும் பளபளப்பான ஆப்பிள்கள், அவை தோற்றமளிப்பதை போன்று இயற்கையானதாக இருக்காது. அவற்றை அவ்வாறு காட்சிப்படுத்துவதற்கு ஆப்பிளின் மேல் மெழுகு மற்றும் செயற்கை நிறங்கள் பூசப்படுகின்றன.
மேலும் படிக்க: உங்கள் வீட்டில் சமையல் எரிவாயு சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா? அப்போ இந்த சிம்பிள் டிப்ஸை நோட் பண்ணுங்க; பணத்தை மிச்சப்படுத்தலாம்
இது போன்று மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களை சரியாக சுத்தம் செய்யாமல் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அந்த வகையில், ஆப்பிளின் மேல் பகுதியில் பூசப்படும் மெழுகை வீட்டிலேயே எவ்வாறு அகற்றலாம் என்று இந்தக் குறிப்பில் காணலாம்.
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் ஒரு டீஸ்பூன் சமையல் சோடா சேர்க்கவும். ஆப்பிள்களை 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் குழாயை திறந்து அதில் இருந்து வரும் நீரில் ஆப்பிள்களை நன்கு கழுவி விடலாம். இவ்வாறு செய்தால் மெழுகு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம் ஆகியவை நீங்கி விடும்.

வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து, ஆப்பிள்களை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் மீதமுள்ள மெழுகு அல்லது இரசாயனங்களை அகற்ற சுத்தமான நீரில் கழுவவும். இந்த முறை எளியதாக இருந்தாலும், மெழுகை அகற்ற பெரிதும் உதவும்.
மேலும் படிக்க: வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்ற கவலை வேண்டாம்; கொத்தமல்லியை ஒரு வாரம் வரை சேமித்து வைக்கும் எளிய வழிகள்
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் சமையல் சோடா ஆகியவற்றை கலக்கவும். இந்த கலவையை ஆப்பிள்கள் மீது தெளித்து, சிறிது நேரம் விட்டு பின்னர் அலசவும். இது அழுக்கு, மெழுகு மற்றும் நுண்ணுயிரிகளை திறம்பட நீக்கு உதவுகிறது.
ஆப்பிள்களை வெதுவெதுப்பான நீரில் 5 முதல் 10 வினாடிகள் வைத்திருந்து, பின்னர் ஒரு துணியால் துடைத்து, இறுதியாக குளிர்ந்த நீரில் அலசவும். சிறிது வெப்பம் மெழுகை உருக்கும், அதே நேரத்தில் குளிர்ச்சியான நீர் ஆப்பிளை உறுதியாக வைத்திருக்கும். இதனால் சுவையும் குறையாது.

குழாய் நீரை திறந்து விட்டு, அதில் ஆப்பிள் மீது பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யலாம். இதன் மூலம் கடையில் இருந்து வாங்கி வந்த ஆப்பிள் மீது படிந்திருக்கும் மெழுகு மற்றும் அழுக்கை போக்க முடியும்.
இதில் நம்மால் பின்பற்றக் கூடிய வழிமுறையை தேர்வு செய்து ஆப்பிள்களை இவ்வாறு சுத்தம் செய்தால், அதில் பூசப்பட்டுள்ள மெழுகை அகற்ற முடியும். இதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]