herzindagi
image

உங்கள் வீட்டில் சமையல் எரிவாயு சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா? அப்போ இந்த சிம்பிள் டிப்ஸை நோட் பண்ணுங்க; பணத்தை மிச்சப்படுத்தலாம்

உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விரைவில் தீர்ந்து விடுகிறதா? கவலையே வேண்டாம், இந்தக் குறிப்பில் இடம்பெற்றுள்ள சிம்பிள் டிப்ஸை பின்பற்றுவதன் மூலம் சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்தலாம்.
Editorial
Updated:- 2025-10-05, 16:27 IST

அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியமாகியுள்ளது. சமையலறையில் நாம் செய்யும் சில சிறிய மாற்றங்கள் சமையல் எரிவாயுவை சேமிக்கவும், சமையல் நேரத்தை குறைக்கவும், பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும். 

மேலும் படிக்க: வீட்டில் பல்லிகள் தொல்லை அதிகமாக இருக்கிறதா? அதனை விரட்ட இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

 

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒரு மாதம் வர வேண்டிய இடத்தில், சுமார் 20 நாட்களிலேயே தீர்ந்து விட்டால், அடுத்த சிலிண்டருக்காக காத்திருக்க வேண்டியதாக இருக்கும். சில எளிய மற்றும் பயனுள்ள சமையல் பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் சமையல் எரிவாயுவின் பயன்பாட்டை நீட்டிக்க முடியும். இதற்கான வழிமுறைகளை தற்போது பார்ப்போம்.

 

சரியான அளவு பாத்திரங்களை தேர்ந்தெடுக்கவும்:

 

சமைக்கும் உணவின் அளவிற்கு ஏற்ற பாத்திரங்களை பயன்படுத்துவது மிக முக்கியம். சிறிய அளவு உணவை சமைக்க பெரிய பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம். சிறிய பாத்திரங்கள் விரைவாகவும், சீராகவும் சூடாகும். இதனால் எரிவாயு நுகர்வும், சமையல் நேரமும் குறையும்.

Gas stove

 

பிரஷர் குக்கரை பயன்படுத்தலாம்:

 

பிரஷர் குக்கர், எரிவாயுவை சேமிப்பதற்கான சிறந்த கருவி. பருப்பு, அரிசி, காய்கறிகள் அல்லது சூப் போன்றவற்றை சமைக்க குக்கரை பயன்படுத்தலாம். அதிகபட்ச பயன்பாட்டை உறுதி செய்ய, சரியான அளவு தண்ணீர் மற்றும் குக்கரின் மூடி சரியாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள்.

 

பாத்திரத்தின் மூடியை சரியாக பயன்படுத்தவும்:

 

சமைக்கும் போது பாத்திரத்தின் மூடியை சரியாக மூடி வைக்கவும். இது நீராவியையும், வெப்பத்தையும் வெளியேறாமல் உள்ளேயே தக்கவைத்து கொள்கிறது. இதனால் உணவு விரைவாக வெந்து, எரிவாயு பயன்பாடு கணிசமாக குறைகிறது. நீங்கள் சாதம், காய்கறிகள் அல்லது பருப்பு என எதை சமைத்தாலும், இந்த எளிய வழி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க: 2 மாத்திரைகள் மட்டும் இருந்தால் போதும்; உங்கள் வீட்டின் பழைய மெத்தையை புதியது போன்று மாற்றலாம்!

 

பொருட்களை முன்பே தயார் செய்யவும்:

 

சமையல் எரிவாயுவை பற்ற வைக்கும் முன் காய்கறிகளை நறுக்கி, மசாலா பொருட்களை தயார் செய்து கொள்வது, பர்னர் எரியும் நேரத்தை குறைக்கும். இது சமையல் நேரத்தை குறைப்பதுடன், தேவையற்ற எரிவாயு விரயத்தையும் தடுக்கிறது.

Gas burner

 

கசிவுகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்:

 

எரிவாயு கசிவு இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும். இது சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்த உதவி செய்வதுடன், விபத்து ஏற்படுவதில் இருந்தும் தடுக்கும். எனவே, இதனை சரியாக பின்பற்றவும்.

 

நெருப்புக்கும், பாத்திரத்திற்கும் இடையேயான உயரத்தை சரியாக பராமரிக்கவும்:

 

சமைக்கும் பாத்திரம் நெருப்பில் இருந்து சரியான உயரத்தில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். பாத்திரம் மிக உயரத்தில் இருந்தால், சமைக்க அதிக நேரம் எடுக்கும். சரியான உயரம் வெப்பத்தை திறம்பட மாற்றி, விரைவாக சமைக்க உதவுகிறது.

 

இந்த சிறிய மற்றும் பயனுள்ள மாற்றங்களை உங்கள் சமையல் பழக்க வழக்கங்களில் மேற்கொள்வதன் மூலம் சமையல் எரிவாயுவை சேமிப்பது மட்டுமல்லாமல், சமையல் நேரத்தையும் குறைத்து, உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]