தமிழ் சினிமாவில் இடுப்பழகி என அழைக்கப்பட்டவர் நடிகை சிம்ரன். மெல்லிய இடை மற்றும் நளினமான நடன அசைவுகளால் ரசிகர்கள் சிம்ரனை இடுப்பழகி என்றழைத்தனர். 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சிம்ரன் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளிவிட்டார். அதன் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயான காரணத்தால் இயல்பான தோற்றத்திற்கு திரும்பி மீண்டும் படம் நடிக்க பல வருடங்கள் எடுத்துக் கொண்டார். பிரசவத்திற்கு பிறகு உடல் எடை 94 கிலோவுக்கு சென்றதாகவும் அதிலிருந்து ஆரோக்கியமான எடைக்கு மாறிட டயட் கடைபிடித்து தினமும் உடற்பயிற்சி செய்ததாக கூறியுள்ளார்.
குழந்தை பிரசவித்த பிறகு என்னுடைய இயல்பான உடல் தோற்றத்திற்கு திரும்பிட நேரம் எடுத்தது. மிகக் கடுமையாக உழைத்தேன். படங்களில் நடித்து கொண்டிருந்த போது டயட் கடைபிடித்தேன். இரண்டு குழந்தைகளை பிரசவித்த காரணமாக பயங்கரமாக எடை அதிகரித்துவிட்டேன். என்னுடைய உடல் எடை 94 கிலோ ஆக அதிகரித்தது. முதல் முறை குழந்தை பிரசவித்த போது இயல்பான உடல்நிலைக்கு வேகமாக திரும்பினேன். எனக்கு இரண்டாவது குழந்தை 35 வயதில் பிறந்தது. அப்போது எடையைக் குறைப்பது மிக சவாலாக மாறியது. எடையைக் குறைக்க 6-7 வருடங்கள் ஆகின. படிப்படியாகவே எடையைக் குறைக்க முடிந்தது.
உடல் எடையைக் குறைக்க யோகா பயிற்சி அதிகம் செய்தேன். உடல் எடையைக் குறைத்திட சாப்பிடுவதில் கட்டுப்பாடு தேவை. நான் இரவு 8.30 மணிக்கு மேல் எதுவும் சாப்பிடமாட்டேன். எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். ஜிம்மிற்கு செல்லாத நாட்களே கிடையாது. ஒரு சில நேரங்களில் மட்டும் தவறவிட்டு இருக்கிறேன். ஆரோக்கியமான உடல் எடையில் இருப்பதை நமக்கான பரிசாக நினைக்க வேண்டும்.
மேலும் படிங்க 20 கிலோ எடை குறைப்பு ரகசியத்தை பகிர்ந்த நடிகை குஷ்பு; நடைபயிற்சியின் மேஜிக்
வாரத்திற்கு 4-5 நாட்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்வேன். தினமும் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சியும் அதை தொடர்ந்து தியானமும் செய்வேன். எடை குறைப்பில் மூச்சுப்பயிற்சியும் அவசியம். குழந்தை பிறந்த பிறகு எடையைக் குறைக்க யோகா செய்தேன். அதன் பின்னர் தோற்றத்திற்காக ஜிம் சென்றேன். உடல் எடையைக் குறைக்க நினைத்தால் விரும்பியதை சாப்பிடவே முடியாது. என்னுடைய உணவில் சாலட், சிக்கன், அதிக புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நல்ல கொழுப்பு நிறைந்திருக்கும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]