நம் வீட்டில் சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் நெய் மற்றும் மிளகு. வெண் பொங்கலில் இவை இரண்டையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் எப்போதாவது நெய்யுடன் மிளகு மட்டும் சேர்த்து சாப்பிட்டு இருக்கிறீர்களா ? நெய் - மிளகு கலவை பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டதாக தரவுகள் உண்டு. மிளகு மற்றும் நெய் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடுவது செரிமானக் கோளாறு, இருமல், சளி மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை தரும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நெய்யுடன் மிளகு சேர்த்து உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் பார்ப்போம்.
கருப்பு மிளகை நன்கு பொடியாக அரைத்து அதில் ஒரு சிட்டிகை அளவு ஒரு ஸ்பூன் நெய்யுடன் கலக்கவும். இந்த கலவையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
நெய்யுடன் இடித்து தூளாக்கிய மிளகை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும். மிளகில் உள்ள பைப்பரின் உடலில் தேங்கியிருக்கும் பிடிவாதமான கொழுப்பை உடைக்கிறது. அதே நேரத்தில் சுத்தமான நெய் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. கொழுப்பை குறைத்து எடையைக் குறைக்கும் அதே நேரத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கின்றது.
நெய் மற்றும் மிளகு கலவை அறிவாற்றல் மற்றும் தெளிவான சிந்தனையை ஊக்குவிக்கிறது. மிளகு அதன் புத்துணர்ச்சியூட்டும் பண்புகளால் மன தெளிவை கொடுக்கிறது. அதே நேரத்தில் நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
நெய் மற்றும் மிளகை கலந்து சாப்பிடுவது சக்திவாய்ந்த செரிமான டானிக் ஆக மாறுகிறது. மிளகில் உள்ள பைப்பரின் கலவை செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் நெய்யின் பண்புகள் செரிமான அமைப்பை சுத்தப்படுத்தி மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த இரண்டு சமையல் பொருட்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மிளகில் உள்ள ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தையும் தலைமுடியையும் சேதத்திலிருந்து பாதுகாத்து பளபளப்பை கொடுக்கிறது. மேலும் நெய்யில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உடலை வலுப்படுத்துகின்றன.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]