-1763033049372.webp)
ஏலக்காய் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அடர்ந்த காடுகளில் தோன்றியதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய உற்பத்திப் பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் ஏலக்காயை ஒவ்வொரு ஊர்களும் ஒவ்வொரு மாதிரியாக கூறுகின்றன. இந்தியில் எலைச்சி என்றும், தமிழில் ஏலக்காய் என்றும் அரேபியில் அலைச்சிர் என்று அழைக்கப்படுகிறது. பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய் என இரண்டு வகைகள் உள்ளது. பெரும்பாலும் இந்தியா முழுவதும் பச்சை ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு ஏலக்காய் இந்தியா, நேபாளம் மற்றும் சீன உணவுகளில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும்
சமையலுக்குச் சுவையை அளிப்பது தொடங்கி உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவியாக இருக்கும் ஏலக்காய் அழகு சாதனப் பொருளாகவும் உள்ளது. இதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் வாசனை திரவியங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகத்தில் பருக்கள் மற்றும் கருந்திட்டுகளை அகற்றுவதோடு சரும எரிச்சலையும் தடுக்கிறது. ஏலக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும், பொடுகுத் தொல்லையை நீக்கி முடி வளர்ச்சிக்கும் உதவியாக உள்ளது. இதோடு மட்டுமின்றி விருந்தோம்பல், ஆடம்பரம் மற்றும் கொண்டாட்டத்தின் சின்னமாகும் ஏலக்காய் உள்ளது. ஏதேனும் விசேச நாட்களில் விருந்தினர்களுக்கு ஏலக்காய் கலந்த தேநீர் அல்லது காபி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்
மசாலாக்களின் ராணி என்றழைக்கப்படும் ஏலக்காயை இந்திய உணவுகளில் பிரியாணி, அசைவ உணவுகள் மற்றும் டீ போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதோடு குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் குலோப் ஜாமூன், கீர், மற்றும் லட்டு போன்ற இனிப்பு வகைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மத்திய கிழக்க உணவு வகைகளிலும் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக சுவையை அதிகரிக்க காபியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பக்லாவா, மாமூல், அரிசி புட்டிங் போன்ற இனிப்பு வகைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அப்புறம் என்ன? இத்தனை ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஏலக்காயை இனி எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வியக்கத்தகு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]