
குளிர்காலம் வந்துவிட்டால், சளி, தொண்டை வலி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் பலருக்கு ஏற்படும். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடலும் சோர்வடையும். இதை தடுக்க சத்தான உணவுகள் சாப்பிடுவதில் நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்.
நம் உடலின் பாதுகாப்பு கவசமாக செயல்படுவது நோய் எதிர்ப்பு சக்தி. இந்த ஆற்றலை தக்க வைத்துக் கொள்வதற்கும், பலப்படுத்துவதற்கும் இன்றியமையாத ஒரு நுண்ணூட்டச்சத்து வைட்டமின் சி ஆகும். இதை உட்கொள்வது, சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுவதுடன், காயங்களை விரைவில் குணப்படுத்தவும், சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கும் ஆற்றல் வைட்டமின் சி சத்தில் நிறைந்திருப்பதால், வைட்டமின் சி சத்துகள் நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்வது மிகச் சிறந்த தீர்வாகும். அந்த வகையில், இந்த சக்தி வாய்ந்த சத்து காணப்படும் உணவுகளின் பட்டியலையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
கொய்யாப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி-யின் அளவு பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. இது தனித்துவமான சுவையையும், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. 100 கிராம் கொய்யாப் பழத்தில் சுமார் 228 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது ஆரஞ்சுப் பழத்தை விடப் பல மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. கொய்யாவில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் முக்கியம். கொய்யாவில் உள்ள கரோட்டினாய்டுகள் (carotenoids) மற்றும் பாலிஃபீனால்கள் (polyphenols) போன்ற அன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உருவாகும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் (oxidative stress), வீக்கத்தையும் எதிர்த்து போராட உதவுகின்றன.

மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க உதவும் சீரக தண்ணீர்; எப்படி தெரியுமா?
பாரம்பரிய மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இது வைட்டமின் சி-யின் களஞ்சியம் என்றே சொல்லலாம். நெல்லிக்காய் என்பது வைட்டமின் சி அதிகம் உள்ள மற்றொரு உணவாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதுடன், கொலஜன் (Collagen) உற்பத்திக்கு அத்தியாவசியமானது. கொலஜன் என்பது சருமம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் புரதமாகும். இதனை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை (elasticity) சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள ஆற்றல் மிகுந்த அன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு (Free Radicals) எதிரான பாதுகாப்பை அளித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளன.
சிறியதாகவும், அடர் பச்சையாகவும் இருக்கும் கிவி பழம் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையம் ஆகும் ஆகும். கிவி பழத்தில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும், குறிப்பாக செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் (Metabolism) மேம்படுத்த உதவுகின்றன. 100 கிராம் கிவி பழத்தில் சுமார் 93 மி.கி வைட்டமின் சி உள்ளதாக அறியப்படுகிறது.

நீங்கள் ஆச்சரியப்படும் வகையில், சிவப்பு குடைமிளகாய் பல சிட்ரஸ் பழங்களை விட அதிக வைட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. இது தவிர, கண் பார்வை, சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமான வைட்டமின் ஏ-வும் இதில் நிறைந்துள்ளது. மேலும், வைட்டமின் பி6, வைட்டமின் கே1, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற முக்கியமான தாதுக்களும் இதில் நிரம்பியுள்ளன.
பப்பாளி செரிமான ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, வைட்டமின் சி-க்கும் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. பப்பாளி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கும், எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் மிகவும் ஏற்றது. இதில் அன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதால், இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. 100 கிராம் பப்பாளியில் சுமார் 60 மி.கி வைட்டமின் சி உள்ளது.
இது போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுவதுடன் சேர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அத்தியாவசியமான சில பழக்கங்களையும் நாம் பின்பற்ற வேண்டும். 7 முதல் 8 மணி நேரம் சீரான உறக்கம், தினசரி உடற்பயிற்சி மற்றும் போதுமான நீர்ச்சத்து ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அவசியம். இவற்றை தவறாமல் மேற்கொண்டால், நாம் நோய் தொற்றுகளின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொண்டு ஆரோக்கியமாக இருக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]