
நம்மில் பலரும் வாழ்க்கையில் ஏதாவது ஒருமுறை மனக்கஷ்டத்தையும், பணக்கஷ்டத்தையும் அதிகளவில் சந்தித்திருப்போம். எப்பொழுது இதெல்லாம் சரியாகும்? என்ன பரிகாரம் செய்யலாம்? என்ற தேடல் அதிகளவில் இருக்கும். ஒரு சிலர் வாழ்க்கையில் அடிக்கடி படும் கஷ்டங்கள் தீர்வதற்காக கோவில் கோவிலாக சென்று பரிகாரங்கள் செய்வார்கள். சிலருக்கு வாழ்க்கையில் நினைத்தது நடந்தேரும். ஆனால் பலருக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் சுற்றித் திரிவார்கள். இதற்கெல்லாம் என்ன பரிகாரங்கள் செய்யலாம்? வீட்டில் எப்போதும் செல்வ செழிப்பு நிலைத்திருக்க என்னென்ன செய்ய வேண்டும்? கோவில்களுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டிலேயே என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? என்பது குறித்த ஆன்மீக தகவல்கள் இங்கே.
சமீப காலங்களாக ஆன்மீக வாதிகளில் ஏலக்காய் பரிகாரம் மிகவும் பிரசித்திப் பெற்று வருகிறது. தெரிந்தும் அல்லது தெரியாமலும் சிலர் சொல்லும் தகவல்களைக் கேட்டு செய்யக்கூடிய ஏலக்காய் பரிகாரம் பலருக்கும் கைக்கொடுப்பதால் மக்கள் அதிகளவில் இந்த பரிகாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் ஏலக்காயை வைத்து சுலபமாக வீட்டிலேயே பரிகாரங்கள் செய்யலாம். ஏலக்காயை கையில் வைத்திருக்கும் போது சுக்ரனின் அவதாரம் கிடைக்கும். பொதுவாக சுக்ரன் என்றாலே பண வரவு அதிகரிக்கும் என்பதால் இதை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம் என நம்பப்படுகிறது.
மேலும் படிக்க: திருமண தடைக்கு காரணமா செவ்வாய் தோஷம்? பரிகாரங்கள் இதோ!
நிறைந்த பௌர்ணமி நாளில் கையில் 6 ஏலக்காயை எடுத்துக் கொள்ளவும். பூஜை அறையில் வழிபாடு மேற்கொண்ட பின்னதாக இந்த ஏலக்காயை சிறிய மஞ்சள் துணியில் கட்டி பணம் இருக்கும் இடத்தில் வைக்கவும். மனதார வேண்டி பணப்பையில் வைக்கும் போது எவ்வித பணப்பிரச்சனையும் இருக்க வாய்ப்பில்லை.
வீட்டில் பெருமாள் படத்திற்கு துளசி மாலை அணிவிக்கவும். பின்னர் தீபம் ஏற்றி பெருமாளுக்கு நெய் வைத்தியம் செய்யவும். இதையடுத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஒரே ஒரு ஏலக்காயை கையில் வைத்து மனதார ஓம் நமோ நாராயண என்ற நாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும். இதையடுத்து இந்த ஏலக்காயை வீட்டில் எங்கு பணம் வைத்திருக்கிறீர்களோ? அந்த இடத்தில் வைத்து விட வேண்டும் என்றும் இவ்வாறு செய்தால் வீட்டில் பணம் செழிக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ஏற்படும் அனைத்து திருமண தடைகளையும் போக்க உதவும் ஜாதக குறிப்புகள்
தொழில் மற்றும் வீட்டில் எவ்வித பணப்பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், பெண்கள் மனமுருகி ஏலக்காயை வைத்து வழிபட வேண்டும். காலையில் 6 மணிக்கு குளித்த பின்னதாக பெண்கள் வீட்டு பூஜை அறையில் சாமி படங்களுக்கு மலர் வைத்து விளக்கேற்றவும். பின்னர் குல தெய்வத்தை நினைத்து 3 ஏலக்காய்களை எடுத்துக் கொள்ளவும். குலதெய்வத்தை நினைத்து மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து வழிபடவும். இதையடுத்து இந்த ஏலக்காயை பணம் இருக்கும் இடங்களில் வைத்தால் போதும். எவ்வித பிரச்சனையும் இன்றி வாழ முடியும். மேலும் பண பிரச்சனையின்றி வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்றால், உங்களது பணப்பையில் 5-7 ஏலக்காய் காய்களை வைக்கலாம் என வாஸ்து பரிந்துரைக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]