ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தை பொறுத்தவரை செவ்வாய் தோஷம் என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். பெரும்பாலும், திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் தடையாக இருக்கிறது என்று பலர் கூறுவார்கள். அந்த வகையில், செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்று பலருக்கு குழப்பம் இருக்கும். அதற்கான விடையை இந்தப் பதிவில் பார்க்கலாம். செவ்வாய் தோஷம் ஏற்படுவதை எவ்வாறு தடுக்கலாம் என்றும் இதில் காண்போம்.
மேலும் படிக்க: உள்ளம் உருகி மல்லிகை எண்ணெயை கொண்டு விளக்கேற்றினால் நினைத்ததை அருள்வார் ஆஞ்சநேயர்
ஒவ்வொருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இரத்த சொந்தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் போது, பூமிக்கு சேதம் விளைவிக்கும் போது அதற்கான பாவங்கள் அனைத்தும் செவ்வாய் தோஷமாக நம்முடைய குழந்தைகளுக்கு ஏற்படும் என்று ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது. பெரும்பாலும் செவ்வாய் தோஷம் ஏற்படுவதை தடுப்பதற்கு, நியாயமக நடந்து கொள்ள வேண்டும் என்று ஆன்மிக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
லக்கனத்திற்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பேச்சால் பிரச்சனை ஏற்படக் கூடும். எனவே, இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பவர்களை, வாக்கு ஸ்தானம் வலுவாக இருப்பவர்களுடன் சேர்த்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்தால், அவர்களுடைய உணர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும். அதன்படி, இத்தகையவர்களுடன் நான்காம் இடம் செவ்வாய் கொண்டவர்களையோ அல்லது 12-ஆம் இடம் செவ்வாய் கொண்டவர்களையோ சேர்க்கலாம்.
செவ்வாய் தோஷத்திற்காக பரிகாரம் செய்யும் வழக்கமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக செவ்வாய் தோஷத்திற்காக இரத்த தானம் செய்யலாம் என்று கூறுவார்கள். இப்படி செய்தால் செவ்வாய் தோஷம் விலகும் என்று நம்பப்படுகிறது. இது தவிர நீர் வழித் தடங்களை சீர் செய்வது மற்றும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதும் செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்களாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வீட்டு வாசலில் காக்கா கரைந்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஆன்மிகம் கூறுவது என்ன?
மேலும், சகோதரர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியான முறையில் செய்தாலும், செவ்வாய் தோஷம் நீங்கும் என்று கூறுகின்றனர். இது அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு செவ்வாய் தோஷம் வருவதை தடுக்கும். சகோதரர்களின் மனம் குளிரும் வகையில் நடந்து கொண்டால் செவ்வாய் தோஷம் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. முருகன் தான் செவ்வாயை ஆளக் கூடிய பெருமானாக இருக்கிறார்.
அந்த வகையில் சஷ்டி விரதம் இருந்து, கந்த சஷ்டி கவசத்தை தினந்தோறும் படித்து, முருக பக்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் விலகி, வாழ்க்கை நன்றாக அமையும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, இது போன்ற பரிகாரங்களை கடைபிடித்து செவ்வாய் தோஷத்தில் இருந்து விலகுவதுடன், அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு செவ்வாய் தோஷம் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்யலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]