
Karuppu Movie: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் சாட்டிலைட் உரிமம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
டிரீம் வாரியர் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த சூழலில் கருப்பு திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, கருப்பு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் சேனல் கைப்பற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
நடிகர் சூர்யா, சமீபத்தில் கங்குவா, ரெட்ரோ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில், கங்குவா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் கடும் விளைவுகளை சந்தித்தது. குறிப்பாக, சூர்யா ரசிகர்களும் கங்குவா திரைப்படத்தின் மூலம் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தது. எனினும், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாதி எதிர்பார்த்த அளவில் இல்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. இதனால், சூர்யாவின் கம்பேக் திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: Padayappa Re-Release: படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை முதலில் அணுகினோம்; சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ரஜினிகாந்த்
அந்த வகையில், சூர்யாவின் 46-வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக வெங்கட் அட்லுரி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் சுமார் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது மட்டுமல்லாமல், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது. இதனால், சூர்யா மற்றும் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
#Karuppu Teaser 🔥
— RJ Balaji (@RJ_Balaji) July 23, 2025
Happy birthday Suriya sir @Suriya_offl ❤️#DaddysHome 😎https://t.co/yYswacrsUz pic.twitter.com/ZxeSRPC8Qs
மேலும் படிக்க: Arasan: வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அரசன் திரைப்படத்தில் இணைந்த விஜய் சேதுபதி; சர்ப்ரைஸ் கொடுத்த கலைப்புலி தாணு
இந்நிலையில், சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் 47-வது திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை, சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. முன்னதாக, ஜித்து மாதவன் இயக்கிய ஆவேஷம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஃபஹத் ஃபாசில் நாயகனாக நடித்த இப்படம் மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும், தமிழிலும் பலருக்கு விருப்பமானதாக அமைந்தது. இதனால், சூர்யாவின் 47-வது திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
It's Official, #Suriya's #Karuppu
— AmuthaBharathi (@CinemaWithAB) December 14, 2025
Satellite rights acquired by Zee Tamil📺✅
Film ontrack for Early Next year release 🔥pic.twitter.com/xAmf9r24Rj
எனினும், அடுத்தபடியாக கருப்பு திரைப்படம் சூர்யாவிற்கு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் நிச்சயம் சூர்யாவிற்கு கம்பேக்காக அமையும் என்று சூர்யா ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். எனினும், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் கருப்பு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றி இருக்கும் தகவல் வெளியாகி இருப்பதால், விரைவாக இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]