சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்தால் உடலுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடை குறைக்க விரும்புவோர் அரிசிக்குப் பதிலாக கோதுமை சப்பாத்தியை பெரும்பாலும் சாப்பிட்டு வருகிறார்கள். பலரும் சப்பாத்தி மாவை பிசைந்து 2 அல்லது மூன்று நாட்களுக்கு பிரிட்ஜில் வைத்து விடுவார்கள். ஆனால் இந்த சப்பாத்தி மாவை பிரிட்ஜில் சேமிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அந்த வரிசையில் சப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்றும் சப்பாத்தி மாவை பாதுகாக்க உதவும் சில குறிப்புகள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பிரிட்ஜில் மாவை வைப்பதால் ஏற்படும் பக்க விளைவு:
சப்பாத்தி தயாரிப்பது ஒரு சிக்கலான செயல்முறை. மாவை பிசைந்து ஊறவைத்து, பின்னர் திரட்டி சுட்டு எடுக்க வேண்டும். இந்தச் செயல்முறையை தவிர்க்க, பலர் முன்கூட்டியே மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து சப்பாத்தி செய்கிறார்கள். ஆனால், இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
பாக்டீரியா வளர்ச்சி:
பிரிட்ஜில் சப்பாத்தி மாவை வைப்பதால் அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளரும். இதை உண்பதால் வயிற்றுப் பிரச்சனைகள், உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.
ஊட்டச்சத்து இழப்பு:
நீண்ட நேரம் பிரிட்ஜில் வைக்கப்படும் சப்பாத்தி மாவில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் குறையும். இதனால் உடல் எடை குறைய கடினமாக இருக்கலாம்.
வாயு பாதிப்பு:
பிரிட்ஜில் இருந்து வெளிவரும் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் இந்த சப்பாத்தி மாவினுள் நுழைந்து, வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லைகளை உண்டாக்கும்.
சுவை மற்றும் தன்மை குறைதல்:
பிரிட்ஜில் வைத்த சப்பாத்தி மாவில் செய்யப்படும் சப்பாத்தி கடினமாகவும், ரொட்டி போல வறண்டும் இருக்கும். சில நேரங்களில் சுவையும் குறையும்.
மாவை காற்றுப் புகா டப்பாவில் வைப்பதால் என்ன நடக்கும்?
சிலர் இந்த சப்பாத்தி மாவை காற்றுப் புகாத டப்பாக்கள், அலுமினியப் படலம் அல்லது ஜிப்லாக் பைகளில் வைக்கிறார்கள். இது ஓரளவுக்கு பாதுகாப்பாக இருந்தாலும், முழுமையாக பாதிப்பைத் தடுக்காது. குறிப்பாக மழைக்காலங்களில், லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இந்த சப்பாத்தி மாவில் வளர வாய்ப்புள்ளது. இது காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சப்பாத்தி மாவை எவ்வாறு பாதுகாப்பாக சேமிப்பது?
சப்பாத்தி மாவை பிசைந்த அதே நாளில் பயன்படுத்துவது சிறந்தது. மீதமுள்ள மாவை பிரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல், சாம்பார், ரசம், சட்னி போன்றவற்றையும் அன்றே தயாரித்து, மீதம் இல்லாமல் உண்பது நல்லது. பிரிட்ஜில் வைத்து பின்னர் சூடு செய்து உண்பது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
மாவை புதிதாக வைக்கும் முறைகள்:
மாவில் எண்ணெய் சேர்த்தல்:
சப்பாத்தி மாவை பிசையும் போது, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்தால், அது மாவின் மேல் ஒரு பாதுகாப்புப் படலத்தை உருவாக்கும். இது ஆக்ஸிஜனின் தாக்கத்தைக் குறைத்து, மாவை மென்மையாகவும் புதிதாகவும் வைத்திருக்க உதவும்.
ஈரமான துணியால் மூடுதல்:
சப்பாத்தி பிசைந்த மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து, மேலே ஒரு ஈரமான துணியால் மூடவும். பின்னர், அதை ஒரு மூடியால் இறுக்கமாக மூடி வைக்கலாம். இது சப்பாத்தி மாவு காய்ந்து போவதைத் தடுக்கும்.
மாவை அதிகம் பிசையாமல் இருத்தல்:
மாவை அதிகமாகப் பிசைந்தால், அது கடினமாகி ரப்பர் போன்று மாறும். எனவே, மாவை மென்மையாக இருப்பதற்கு மட்டுமே பிசையவும். இந்த எளிய முறைகளைப் பின்பற்றினால், சப்பாத்தி மாவை நீண்ட நேரம் புதிதாக வைத்து, சுவையான சப்பாத்திகளை தயாரிக்கலாம்.
Image credits: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation