தினமும் குடிக்கிற டீயில் இந்த பொடியை கலந்து குடித்து பாருங்க; ரத்த அழுத்தம் சீராகும் கொழுப்பு கரையும்

தினமும் குடிக்கும் டீயில் இந்த ஒரு பொடியை கால் டேபிள் ஸ்பூன் அளவுக்கு சேர்த்து குடித்து வந்தால் உங்களுக்கு தலைவலி குறையும், இருமல் குணமாகும், உடலில் உள்ள கெட்டுக் கொழுப்புகள் எல்லாமே கரையும். 
image

காலையில் தூங்கி எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால் தான் அந்த நாளை நல்லபடியாக துவங்கியது போல இருக்கும். காலையில் மட்டுமில்லாமல் ஒரு சிலர் மாலையிலும் டீ குடிக்க அதிகம் விரும்புவார்கள். அப்படி நீங்கள் தினமும் குடிக்கும் டீயில் இந்த ஒரு பொடியை கால் டேபிள் ஸ்பூன் அளவுக்கு சேர்த்து குடித்து வந்தால் உங்களுக்கு தலைவலி குறையும், இருமல் குணமாகும், உடலில் உள்ள கெட்டுக் கொழுப்புகள் எல்லாமே கரையும். உடலில் உள்ள நரம்புகள் எல்லாம் பலமாகும், நரம்பில் ஏதாவது அடைப்பு இருந்தால் கூட அது நீங்கும், உயர் ரத்த அழுத்தம் சரியாகும், உடல் சோம்பல் மறைந்த சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இந்த ஆரோக்கியமான பொடியை தயாரிப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • அதிமதுரம்
  • சோம்பு
  • கருப்பு ஏலக்காய்
  • பச்சை ஏலக்காய்
  • சுக்கு
  • கிராம்பு
  • கருப்பு மிளகு

drinking tea

தயாரிப்பது எப்படி?


முதலில் அதிமதுரம் எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டு மருந்து கடைகளில் இந்த அதிமதுரம் கிடைக்கும். இது கொஞ்சம் இனிப்பு சுவையில் இருக்கும். உங்களுக்கு அல்சர் பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்த இந்த அதிமதுரம் பெரிதும் உதவும். சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால், ஒற்றை தலைவலி, தலைபாரம் இது அனைத்தையும் குறைக்கும். இப்போது ஐந்து அல்லது ஆறு அதிமதுர துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அப்படியே கல்வத்தில் போட்டு நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் வீட்டில் கல்வம் இல்லை என்றால் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கலாம்.

athimathuram

அடுத்ததாக கருப்பு ஏலக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நாம் இந்த கருப்பு ஏலக்காயின் விதைகளை மட்டும் தான் பயன்படுத்த போகிறோம். உங்களுக்கு தொண்டையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை சரி செய்யக்கூடிய சக்தி இந்த கருப்பு ஏலக்காய்க்கு உள்ளது. இது ஆஸ்துமாவுக்கு ரொம்ப நல்லது. நம் உடலில் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கும் இது உதவும். அடுத்து சுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை காய வைத்து கிடைப்பதுதான் இந்த சுக்கு. தலைவலி, இருமல் இதை குணப்படுத்த சுக்கு உதவும். இதையும் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களிடம் சுக்குப்பொடி இருந்தால் அதை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: சாப்பிட்ட உடனே இந்த தவறுகளை செய்யாதீங்க; உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா?

இப்போது அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சோம்பு வாயு பிரச்சனையை குணப்படுத்தும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சக்தி இந்த மிளகுக்கு உள்ளது. இதனை அடுத்து 10 கிராம்பு எடுத்து இதில் சேர்த்து வதக்க வேண்டும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கிராம்பு பெரிதும் உதவும். நாம் ஏற்கனவே கருப்பு ஏலக்காயின் விதைகளை எடுத்து வைத்திருப்போம், இப்போது அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 20 பச்சை ஏலக்காயும் சேர்க்க வேண்டும். இந்த பச்சை ஏலக்காய் உங்கள் மன அழுத்த பிரச்சனையை போக்கும். இந்த பொருட்கள் எல்லாம் லேசாக சூடாகி வந்ததும் நாம் அரைத்து வைத்த அதிமதுரத்தையும் இதில் சேர்த்து வதக்கி அடுப்பை ஆப் செய்து விடலாம்.

இது சிறிது நேரம் சூடு ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை நீங்கள் டீ தயாரிக்கும் போது அதில் கால் டேபிள் ஸ்பூன் அளவுக்கு சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக கால் டேபிள்ஸ்பூன் அளவுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. இந்த டீயில் இனிப்பு சுவைக்காக நீங்கள் கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம். இது மிகவும் சுவையாகவும் இருக்கும். எப்போதெல்லாம் நீங்கள் டீ குடிக்கிறீர்களோ அப்போது இந்த பொடியை கலந்து குடிக்க மறக்காதீர்கள். பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த பொடியை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP