திருமணம் நல்ல முறையில் நடக்க குலதெய்வத்தை வழிபடும் முறை

திருமண பந்தம் என்பது கடைசி வரையில் இணைந்து வாழக்கூடிய ஒரு அற்புதமான பந்தமாகும். இரு குடும்பத்தார் சேர்ந்து நடத்தும் திருமண விழாவை நல்ல முறையில் நடத்த நமது  குலதெய்வம் மற்றும் முன்னோர்களை வணங்கிய பின் அனைத்து நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள். 
image

நாம் நினைத்தாலே ஓடி வந்து உதவி செய்யும் முதல் தெய்வமே குல தெய்வம் ஆகும். திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். திருமணம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பைப் பொறுத்து அமைகிறது. இரு வீட்டார் முடிவு செய்து, முக்கியமாக மாப்பிள்ளை, பெண் இருவரின் விருப்பத்திற்குப் பிறகு திருமணத்தை உறுதி செய்வார்கள். அதன்பிறகு, எந்த தடங்களும் இன்றி திருமணம் நல்ல முறையில் நடைபெறக் குலதெய்வத்தை வழிபடுவது பராம்பரிய வழக்கம். எந்தெந்த முறைகளில் குலதெய்வம் வழிப்படலாம் என்பதை பார்க்கலாம்.

திருமண அழைப்பிதழ் வைத்து வணங்குவது

திருமணம் முடிவு செய்த பிறகு, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் திருமண அழைப்பிதழை தருவது வழக்கம். திருமண அழைப்பிதழ் தருவதற்கு முன் குலதெய்வ கோவிலுக்குச் சென்று திருமண பத்திரிக்கை தெய்வத்தின் திருவடிகளில் வைத்து வழிபட்ட பிறகு அனைவருக்கும் கொடுக்க தொடங்குவார்கள்.

சர்க்கரை பொங்கல் செய்து வழிபடும் முறை

சிலரின் குலவழக்கத்தின்படி குலதெய்வ கோவிலுக்கு சென்று சர்க்கரை பொங்கல் செய்து, தெய்வத்திற்குப் பிடித்த படையல் அனைத்து வைத்து. உறவினர்கள் அனைவரையும் அழைத்து குலதெய்வம் மற்றும் மூதாதையர்களிடம் குறிகேட்டு, அவர்களின் ஒப்புதலை வாங்கி பின் திருமண காரியங்களை தொடங்குவார்கள்.

pongal (2)

கரகம் எடுத்து வழிபடுவது

புனித கலசம் கொண்டு குலதெய்வத்தை அந்த கலசத்தில் அமைத்து குறி கேட்பார்கள். கிராமப்புறங்களில் குலதெய்வ வழிபாடு என்பது அவர்களின் சொந்த நிலங்களில் வைத்து வழிபடுவார்கள். அந்த இடத்தில் கரகம் அமைத்து, உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடிய, தெய்வத்திற்குப் பிடித்த படையல் வைத்து, திருமணத்திற்காக உத்தரவு கேட்பார்கள்.

pongal (1)

குலதெய்வ வழிபாட்டின் முக்கத்துவம்

திருமணம் என்பது ஒரு முக்கியமான தருணம். இந்த நாளில், மணமகனும் மணமகளும் தங்கள் குல தெய்வத்தை வழிபடுவது வழக்கம். குல தெய்வ வழிபாடு மூலம், அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நீடித்ததாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். கல்யாணத்திற்குப் பிறகு ஒருவரின் வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது. கல்யாணத்திற்குப் பிறகு ஒருவரின் பொறுப்புகள் அதிகம் ஆகின்றன.

மேலும் படிக்க: பெண்களுக்கு ஏற்படும் அனைத்து திருமண தடைகளையும் போக்க உதவும் ஜாதக குறிப்புகள்

குலதெய்வ வழிபாடு செய்வதற்கு, குறிப்பிட்ட நாட்களும், நேரங்களும் உள்ளன. பிரம்ம முகூர்த்த நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP