நாட்டு சோளம் Vs ஸ்வீட் கார்ன் : எதில் ஊட்டச்சத்து அதிகம், உடலுக்கு நல்லது ?

நாட்டு சோளம், ஸ்வீட் கார்ன் இவை இரண்டுமே மார்க்கெட்டில் கிடைக்கிறது. சுவைக்காக எல்லோரும் ஸ்வீட் கார்ன் சாப்பிட்டாலும் நாட்டு சோளத்தின் நன்மைகளை மறந்துவிடக்கூடாது. நாட்டு சோளம் Vs ஸ்வீட் கார்ன் எதில் ஊட்டச்சத்து அதிகம், உடலுக்கு நல்லது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
image

மழைக்காலத்தில் சுட சுட வேகவைத்த சோளம், சுட்ட சோளம் சாப்பிடுவது நம் எல்லோருக்கும் பிடிக்கும். குறைவான விலையில் கிடைக்ககூடிய தங்கம் என சோளத்தை குறிப்பிடலாம். 10-15 ஆண்டுகளுக்கு முன்பாக வேகவைத்த நாட்டு சோளம் ரூ 5, ரூ 10க்கு கிடைக்கும். இப்போது எங்கு பார்த்தாலும் ஸ்வீட் கார்ன் மயமாகி விட்டது. நாட்டு சோளம், ஸ்வீட் கார்ன் இரண்டுமே தனித்துவமான சுவையை கொண்டுள்ளன. இவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஒப்பிடும்போது, ஒன்று மற்றொன்றை விட மிகவும் ஆரோக்கியமானது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டு சோளம் Vs ஸ்வீட் கார்ன் எது நமக்கு நல்லது ? வாருங்கள் பார்ப்போம்.

சோளக்கருது ஊட்டச்சத்து

எல்லா தானிய வகைகளை போல மக்காச்சோளமும் அதிக ஆரோக்கியமானது. நாம் சோளத்தை ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் பார்த்திருப்போம். சில நாடுகளில் சிவப்பு, ஊதா, வெள்ளை நிறங்களிலும் மக்காச்சோளம் கிடைக்கிறது. வேகவைத்த 100 கிராம் சோளத்தில் 96 கலோரிகள், நீர்ச்சத்து 73 விழுக்காடு, புரதம் 3.4 கிராம், நார்ச்சத்து 2.4 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 21 கிராம், கொழுப்பு 1.5 கிராம் இருக்கிறது.

சோளத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டின் முக்கிய ஆதாரம் ஸ்டார்ச் ஆகும். இது சோளத்தின் எடையில் 30 -80 சதவீதம் நிறைந்திருக்கிறது. சிறிய அளவில் உள்ள சர்க்கரையில் பெரும்பாலானவை சுக்ரோஸ் ஆகும். ஸ்வீட் கார்னில் சர்க்கரை இருந்தாலும் அதிக கிளைசெமிக் குறியீடு கிடையாது. மக்காச்சோளத்தில் குறிப்பிடத்தக்க அளவு (10-15 விழுக்காடு) புரதம் இருக்கிறது. இதை தவிர மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

sweet corn vs field corn nutrition comparison

நாட்டு சோளம் Vs ஸ்வீட் கார்ன்

பொதுவாக மக்காச்சோளத்தில் அதிகளவு ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆனால் அதை முழுமையாக பெறுவது நீங்கள் வேகவைத்து சாப்பிடும் விதத்தில் இருக்கிறது. சோளத்தை வேகவைத்து, சுட்டு சாப்பிடுவதில் ஊட்டச்சத்து மாறுபடும். நாட்டு சோளம், ஸ்வீட் கார்ன் இவை இரண்டில் எது ஆரோக்கியமானது என்றால் ஊட்டச்சத்து நிபுணர்கள் நாட்டு சோளம் என பதிலளிக்கின்றனர்.

ஸ்வீட் கார்ன் கலப்பின விதைகளை கொண்டு வளர்க்கப்படுகிறது. இதை வளர்த்து அறுவடை செய்வதற்கு அதிக வளங்கள் தேவை. ஊட்டச்சத்தை பொறுத்தவரை சர்க்கரை அதிகமாகவும் வைட்டமின்கள் குறைவாக இருக்கின்றன. ஸ்வீட் கார்னில் உள்ள நார்ச்சத்தும் மிகக் குறைவே.

அதுவே நாட்டு சோளம் எடுத்துக்கொண்டால் 3 ஆயிரம் வகைகள் உள்ளன. இதற்கு குறைவான நீர் மற்றும் உரங்கள் கொண்டு வளர்க்கலாம். நாட்டு சோளத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் குறைந்த இரசாயனங்கள் உள்ளன. இதில் உள்ள சர்க்கரை மாவுச்சத்தாக மாற்றப்படுகிறது. எனவே இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. ஒட்டுமொத்தமாக நாட்டு சோளம் ஸ்வீட் கார்ன்-ஐ விட ஆரோக்கியமானது.

சோளம் சாப்பிடுவதன் நன்மைகள்

சோளம் சாப்பிடுவது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் தருகிறது. சோளத்தில் ஆக்ஸிஜனேற்றிகள், ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற கரோட்டினாய்டுகள் உள்ளன. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சோளத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சோளத்தின் ஃபோலேட் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

சோளம் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்

எந்த உணவையும் அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியமற்றது. சோளத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதிகளவு சாப்பிடுவதில் பிரச்னையும் இருக்கிறது.

சோளத்தில் பைடிக் அமிலம் உள்ளது, இது உடலில் இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் உறிஞ்சுவதை பாதிக்கும். சோளம் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கலும் ஏற்படலாம். எனவே ஒரு நாளைக்கு ஒரு சோளக் கருதுக்கு மேல் சாப்பிடாதீர்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP