நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடல்நலத்திற்கு எவ்வளவு முக்கியமானவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கர்ப்ப காலத்தில், சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது தாய்க்கும், குழந்தைக்கும் அத்தியாவசியமானது.
மேலும் படிக்க: கர்ப்பிணிகள் முருங்கைக்காய் சாப்பிடலாமா கூடாதா? உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன?
கர்ப்ப காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்று சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை கர்ப்பிணிகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
சத்துக்கள் நிறைந்த பீட்ரூட், கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
பல வண்ணங்களில் கிடைக்கும் குடைமிளகாய் பார்ப்பதற்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயங்கச் செய்து, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
மேலும் படிக்க: கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வராமல் தடுக்க; இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்
வைட்டமின்கள் சி, கே, மற்றும் ஃபோலேட் (folate) போன்ற சத்துகள் நிறைந்த ப்ரோக்கோலி, கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனுள்ளது. இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றான மலச்சிக்கலை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. ஃபோலேட், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது.
சிறுசிறு உருண்டைகளாக இருந்தாலும், பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்று கூறலாம். இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது செரிமானத்திற்கு உதவுவதுடன், தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
இந்த காய்கறிகளை தினமும் சுமார் 500 கிராம் அளவில், வேகவைத்து உண்பது அதிகபட்ச நன்மைகளை தரும். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் நலமாக வாழலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]