herzindagi
image

வியக்கத்தகு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட மக்காச்சோளம்

மக்காச்சோளத்தில் நார்ச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
Editorial
Updated:- 2025-08-23, 19:37 IST

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் வகைகளில் முக்கியமானது பாப்கார்ன். தியேட்டருக்குச் சென்றாலே பாப்கார்ன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இருக்கும். அந்தளவிற்கு இதன் சுவை அவர்களைக் கட்டியிழுக்கும். ஆனால் என்ன? ஸ்நாக்ஸாக சாப்பிடுவது தான் கேடு விளைவிக்கும். எப்போது மக்காச்சோளத்தை வேக வைத்து சாப்பிட வேண்டும். இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

 மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் தூக்கம்; நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் சிம்பிள் டிப்ஸ்

மக்காச்சோளமும் ஆரோக்கிய நன்மைகளும்:

செரிமானத்திற்கு உதவும் மக்காச்சோளம்:

மக்காச்சோளத்தை வாரத்திற்கு ஒருமுறையாவது குழந்தைகளுக்கு வேக வைத்துக் கொடுக்க வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய வயிறு உப்பிசம், வாந்தி போன்ற பிரச்சனைகளைக் குறைப்பதற்கு உதவுகிறது. குடலில் ஆரோக்கிய நுண்ணுயிர்களைப் பாதுகாக்கவும் மக்காச் சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவியாக உள்ளது.

 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:


சமீப காலங்களாக இதய நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு மக்காச்சோளம் சிறந்த தேர்வாக அமையும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதனால் இதய நோய் பாதிப்பைக் குறைக்க முடியும்.

மேலும் படிக்க: கறிவேப்பிலையுடன் உங்களது நாளைத் தொடங்குங்கள்; நம்ப முடியாத ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்

 

சர்க்கரை நோய்க்குத் தீர்வு:

டயாபடிஸ் எனப்படும் சர்க்கரை நோய் பாதிப்பை சந்திப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பைத் தவிர்க்க மக்காச்சோளத்தை வேக வைத்து சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்துகள் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை மெதுவாக வெளியிட உதவுகிறது. இதனால் இன்சுலின் சுரப்பு சீராக்குகிறது. சர்க்கரை நோய் பாதிப்பையும் தவிர்க்க உதவுகிறது.

 

இதோடு மட்டுமின்றி இளம் வயதில் ஏற்படக்கூடிய கண்புரை நோய் மற்றும் வயதான காலத்தில் ஏற்படும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று நினைப்பில் உள்ளவர்கள் தங்களது உணவு முறையில் கட்டாயம் மக்காச்சோளத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் மற்றும் லுடீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

Image credit - Freepik

இதுபோன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை மக்காச்சோளம் கொண்டிருப்பதால், இனி பாப்கார்ன் செய்வதைத் தவிர்த்துவிட்டு வேக வைத்துக் கொடுப்பது நல்லது. ஸ்வீட் கார்ன், மசாலா கார்ன் என அவர்களுக்குப் பிடித்தாற்போன்று செய்துக் கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]