அதீத ருசியோடு உடல் ஆரோக்கியத்திற்குப் பூண்டு பட்டர் பாஸ்தா; ரெசிபி டிப்ஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடக்கூடிய ரெசிபிகளில் ஒன்றான பூண்டு பாஸ்தாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யும் முறை.
image

வீட்டில் உள்ள குழந்தைகள் பொதுவாகவே வழக்கமான சாப்பிட்டிற்குப் பதிலாக வித்தியாசமான பெயர் மற்றும் சுவையில் இருக்கும் ரெசிபிகளைச் சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தைகள் மட்டுமல்ல சில சமயங்களில் பெரியவர்கள் கூட நாவிற்கு புதிய சுவையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதுபோன்றவர்களுக்காகவே வீட்டிலேயே எளிதாக மற்றும் வித்தியாசமாக சுவையைக் கொடுக்கும் பூண்டு பாஸ்தா எப்படி செய்யலாம்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.

பூண்டு பட்டர் பாஸ்தா ரெசிபி:

வீட்டிலேயே எளிமையான முறையில் சீக்கிரம் செய்யக்கூடிய பூண்டு பாஸ்தா செய்வதற்கு முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேவையான பொருட்கள்:

  • பாஸ்தா - 2 கப்
  • வெண்ணெய் - 50 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • உப்பு - சிறிதளவு
  • கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
pasta

பூண்டு பட்டர் பாஸ்தா செய்முறை:

  • பூண்டு பட்டர் பாஸ்தா ரெசிபி செய்வதற்கு முதலில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்துக் கொள்ளவும்.
  • முதலாவதாக 2 கப் பாஸ்தாவை தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஒரு கடாயை சூடேற்றி வெண்ணெய்யை உருக்கிக் கொள்ளவும்.
  • சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கி வெங்காயத்தைச் சேர்த்து 5 அல்லது 6 நிமிடங்களுக்கு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

garlic recipes

  • பின்னர் இதனுடன் வேக வைத்த பாஸ்தாவையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிதளவு மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • ஒரு 5 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் போதும் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பூண்டு பட்டர் பாஸ்தா ரெடி.

மேலும் படிக்க:குழந்தைகளின் மதிய உணவிற்கு சுவையான குடை மிளகாய் புலாவ் செய்முறை

இதுபோன்ற முறைகளில் வாரத்திற்கு ஒருமுறையாவது குழந்தைகளுக்குச் செய்துக் கொடுக்கவும். நிச்சயம் மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள். அப்புறம் என்ன? சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட ஆசையோடு சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி மட்டுமல்ல குழந்தைகள் விரும்பிச் சாப்பிட ஆசைப்படக்கூடிய சாலட்டுகளையும் பாஸ்தாவைக் கொண்டு செய்யலாம். முதலில் ஸ்பிரிங் பாஸ்தாவை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கா? சுவையான அடை தோசை செய்துப்பாருங்க

பின்னர் இதனுடன் கொத்தமல்லி, தக்காளி, பனீர், குடைமிளகாயை கடாயில் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேக வைத்த பாஸ்தா மற்றும் காய்கறி கலவைகளைச் சேர்த்து கிளறிவிட்டால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியமான பாஸ்தா சாலட் ரெடி.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP